கடற்கரை மணலில் 50 அடி நீள சாண்டா கிளாஸ் !!!
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சனிக்கிழமை (டிசம்பர் 25, 2021) ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் சாண்டா கிளாஸின் 50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்ட மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் அவர் உருவாக்கிய மணல் கலையின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சுமார் 5,400 சிவப்பு ரோஜாக்களை பயன்படுத்தி இந்த சாண்டா கிளாஸ் உருவத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த கலையின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த அவர், “இது ஒரு புதிய உலக சாதனையை படைக்கும் என்று நம்புகிறேன்” என அவர் பதிவிட்டுள்ள பதிவிற்கு Caption கொடுத்துள்ளார்.
பட்நாயக் தனது சுதர்சன் கலைக் கழகத்தின் உதவியுடன் இந்த அற்புதக் கலையை செய்வதற்கு எட்டு மணி நேரம் எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளார். இந்த மணல் கலைக்கான ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள் தேவைப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஏற்கனவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் தொடங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம், எனவே Covid-19 வழிகாட்டுதல்களை பின்பற்றும் செய்தியை இந்த மணல் கலையுடன் இணைத்து பரப்புவதற்கே இந்த சிற்பத்தை உருவாக்கியதாக பட்நாயக் கூறியுள்ளார்.
சுதர்சன் பட்நாயக் 16 ஆண்டுகளுக்கும் மேலாக மணல் கலைகளை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அவரது பல மணல் சிற்பங்கள் Limca Book Of World Record-களில் இடம்பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் கலை சாம்பியன்ஷிப் மற்றும் திருவிழாக்களில் சுதர்சன் பங்கேற்றுள்ளார். இதுபோன்ற போட்டிகளிலும் திருவிழாக்களிலும் பங்கேற்று இந்தியாவிற்காக பல விருதுகளையும் சுதர்சன் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் உருவாக்கிய சாண்டா கிளாஸ் மணல் சிற்பத்தின் புகைப்படம் அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.