• September 10, 2024

Bluetooth விக் உபயோகித்து Copy அடிக்க முயன்ற மாணவர் !!!

 Bluetooth விக் உபயோகித்து Copy அடிக்க முயன்ற மாணவர் !!!

இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் நேர்மையான படிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து தேர்வில் மோசடி செய்வதற்கான புதிய மற்றும் புதுமையான முறைகளை முயற்சிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

உத்தரபிரதேச மாணவர் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்ததோடு சமூக வலைதளங்களிலும் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான தேர்வில் கலந்து கொண்ட போது தேர்வு விதிகளை மீறியதற்காக பிடிபட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரது தலையில் ப்ளூடூத் விக் மற்றும் புளூடூத் வசதி கொண்ட Airpod-கள் பொருத்தி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

Copying | The Talkin' Teen!

பாதுகாப்பு அதிகாரிகள் மாணவரின் காதுகளுக்குள் இருந்த இரண்டு Airpod-களையும் கண்டுபிடித்தனர். இதில் சுவாரசியமானது என்னவென்றால் அந்த Airpod-கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு சிறியதாக இருந்தது தான். சோதனையின்போது தனது காதில் இருந்த Airpod-களை அந்த மாணவரே கழட்டி போலீசாரிடம் கொடுத்தார்.

ஐ.பி.எஸ் அதிகாரி ருபின் ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாணவனை சோதனை நடத்தி அவரது Bluetooth விக் மற்றும் Airpod-களை போலீசார் கைப்பற்றிய வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் அந்த மாணவரின் தலையிலிருந்து கஷ்டப்பட்டு அந்த நவீன விக்கை போலீசார் கழட்டுகின்றனர்.

வேலைக்கு சேர வேண்டும் என நினைப்பவர்கள் நேர்மையான வழியை தேர்ந்தெடுக்காமல் இதுபோன்ற பித்தலாட்டத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது என நெட்டிசன்கள் பலர் இந்த வீடியோவிற்கு தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் போது சிரிப்பு வருகிறது எனவும் நகைச்சுவையாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்வு நடக்கும் இடங்களில் சோதனைகள் Strict-ஆக இருப்பதாலேயே இதுபோன்ற தவறுகளை கண்டறிய முடிகிறது என காவல்துறை சார்பில் கூறுகின்றனர். எந்த ஒரு வேலையில் சேர வேண்டும் என்றாலும் அதற்கான நேர்மையான வழியை பின்பற்றுவதே புத்திசாலித்தனமாகும். இது போன்ற குறுக்கு வழி ஒருபோதும் நமக்கு உதவாது என்பதை இச்சம்பவம் எடுத்துரைக்கிறது.

தேர்வு எழுத வந்தவரிடம் காவல்துறை நடத்திய சோதனை வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.

இது போன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.