ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர் !!!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்ஷுக்ஹ் மண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. ஒரு பெண் சுகாதார பணியாளர் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வது போன்ற ஒரு மனதை கவரும் படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.
Covid-19 தடுப்பூசி செலுத்துவதற்காக ஒட்டகத்தில் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த சுகாதார பணியாளர் சென்று கொண்டிருக்கிறார். நாட்டின் கடைசி நபருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு எவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம்.
இதுவரை இந்தியாவில் 140 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தது. இந்நிலையில் சுகாதார பணியாளர் ஒருவர் ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி செலுத்துவது போன்ற இந்த புகைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ்-ன் புதிய அலைகள் வருவதற்கு முன் அரசாங்கம் காட்டும் வழிமுறைகளை பின்பற்றியும், தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் முன்களப்பணியாளர்கள் இவ்வளவு கடின உழைப்பை போட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில், மக்களும் அவர்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்களை பார்க்கும்போது, முன் களப்பணியாளர்களின் தியாகம் எவ்வளவு பெரியது என்பதை நமக்கு உணர்த்துகிறது. அடுத்தடுத்த கொரோனா அலைகள் வந்தாலும் நாம் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் அந்த அலைகளை சுலபமாக எதிர்கொள்ளலாம்.
ஒட்டகத்தில் சென்று கிராமத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என்ற எண்ணம் உடைய இந்த சுகாதாரப் பணியாளருக்கு Deep Talks தமிழ் சார்பில் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்ஷுக்ஹ் மண்டவியா ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படங்களை கீழே உள்ள பதிவில் காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு deep talks தமிழுடன் இணைந்திருங்கள்.