இந்த பதிவு ஒவ்வொரு உணவு பிரியர்களும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு விஷயத்தை பார்க்க கூடாது என்று நினைக்க வைக்கும் ஒரு பதிவாகும். ஒரு கேஎஃப்சி வாடிக்கையாளர் தனது கேஎஃப்சி ஹாட் விங்ஸ் பெட்டியில் ஒரு முழு கோழியின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.
தான் ஆர்டர் செய்த உணவில் இந்தக் கோழியின் தலை இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த டெலிவரிக்கு 2 ஸ்டார் ரிவ்யூ கொடுத்த அந்த வாடிக்கையாளர், “எனது சூடான விங்ஸ் உணவில் வறுத்த கோழி தலையை கண்டேன். இதனால் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளேன்.” என இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
கேஎஃப்சி தரப்பில், தாங்கள் இச்சம்பவத்தை அறிந்த உடன் அதிர்ச்சி அடைந்ததாகவும், குழப்பம் அடைந்ததாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி இது முற்றிலும் தங்கள் நிறுவனத்தின் தவறு என ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
கேஎஃப்சி சிக்கனை விரும்பி சாப்பிடும் ஒவ்வொரு கேஎஃப்சி பிரியருக்கும் இச்சம்பவம் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் தங்களது காரசாரமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து கேஎஃப்சி நிறுவனம் வெளியிட்டுள்ள மன்னிப்பு கடிதம் அடங்கிய twitter பதிவை கீழே காணுங்கள்.
Ahem ????️ pic.twitter.com/dM0xi1WLf9
— KFC UK (@KFC_UKI) December 22, 2021
ஆர்டர் செய்த உணவு பொருட்களை துள்ளியமாக பார்த்து கவனத்துடன் pack செய்ய வேண்டும் என்பதையும், சுத்தமான முறையில் உணவகங்களில் உணவு பொருட்கள் தயார் செய்யப்பட வேண்டும் என்பதையும் இச்சம்பவம் அனைத்து உணவக உரிமையாளர்களுக்கும் உணர்த்துகிறது. இதுபோன்ற தவறுகள் உணவகங்களில் உணவு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- பிரம்மாண்ட வாசுகி பாம்பு: 4.7 கோடி ஆண்டுகள் பழமையான மகா பாம்பின் கதை
- காலரா நோயை விரட்டிய ஜல்லிக்கட்டு: நம்ப முடியாத உண்மை கதை!
- இணையத்தில் இலங்கை எப்படி இணைந்துள்ளது? கடலுக்கடியில் மறைந்திருக்கும் ரகசியம்!
- அம்பேத்கரின் மறைந்திருக்கும் பொருளாதார சிந்தனைகள் – நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் வகுத்த பாதை என்ன?
- முளைப்பாரி எடுப்பதன் பின்னணியில் மறைந்திருக்கும் விஞ்ஞான உண்மை தெரியுமா?
இதுபோன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.