• December 5, 2024

அவித்த முட்டை Astronaut முட்டையான கதை !!!

 அவித்த முட்டை Astronaut முட்டையான கதை !!!

வித்தியாசமான உணவுப் பழக்கங்களையும் உணவுகளையும் வைத்து சமீப காலங்களில் எண்ணற்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வகையில் பார்ப்பதற்கு வினோதமாக காட்சியளித்த Astronaut முட்டை தற்போது பெரிய பேசுபொருளாகி இருக்கிறது.

முட்டையை அனைவரும் அவரவர்களுக்கு பிடித்தவாறு பல்வேறு வகையில் சமைத்து சாப்பிடுவர். ஆம்லெட், பொடிமாஸ், கலக்கி, அவித்த முட்டை என முட்டையில் பலவகை உள்ளது. ஆனால் தற்போது வைரல் ஆகி வரும் வீடியோவில் இருக்கும் Eggstronaut முட்டை அனைவரையும் வியக்க வைக்கிறது.

Are Whole Eggs and Egg Yolks Bad for You or Good?

சாதாரணமான அவித்த முட்டையை சாப்பிட நினைத்தவருக்கு ஒரு வித்தியாசமான அதிர்ச்சி காத்திருந்தது. இந்த வீடியோவில் இருக்கும் முட்டை அவித்த பிறகு அதன் சில பகுதி ஓடை விட்டு வெளியே பிதுங்கி வந்துள்ளது. அவ்வாறு பிதுங்கி உள்ள முட்டை பார்ப்பதற்கு ஒரு விண்வெளி வீரரைப் போல காட்சியளித்தது.

இந்த முட்டையின் மஞ்சள் கரு விண்வெளி வீரரின் தலை கவசத்தை போல அழகாக அமைந்துள்ளது. இந்த முட்டையின் வீடியோ ரெட்டிட் தலத்தில் பகிரப்பட்டு இருந்தது.

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான சுவாரசியமான comment-களை பதிவிட்டு வருகின்றனர். என்ன தான் முட்டையில் பலவகை இருந்தாலும் இந்த Eggstronaut முட்டை அனைவரையும் வியக்கவைத்த அதிசய முட்டையாக மாறியிருக்கிறது. இந்த முட்டைக்கு Eggstronaut என நெட்டிசன்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

ரெட்டிட் தளத்தில் வெளியிடப்பட்ட இந்த Eggstronaut முட்டையின் வீடியோவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.