மணப்பெண்ணின் துணைப்பெண்ணுக்கு சம்பளம் 1.5 லட்சமா ???
ஏதாவது ஒரு வேலை செய்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மத்தியில் மணப்பெண்ணுக்கு துணை பெண்ணாக இருப்பதை மட்டுமே வேலையாக செய்து லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் அமெரிக்காவை சேர்ந்த ஜென் கிளாண்ட்ஸ் என்னும் பெண்மணி. சமீபத்தில் Always a Bridesmaid எனும் புத்தகத்தை இவர் எழுதியுள்ளார்.
இவர் இதுவரை 125-க்கும் மேற்பட்ட திருமணங்களில் மணப்பெண்ணின் துணை பெண்ணாக பணிபுரிந்துள்ளார். ஒவ்வொரு திருமணத்திற்கும் இவர் வாங்கும் சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பின் படி ஒன்றறை லட்சத்திற்கும் அதிகம் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்திய நாட்டிலெல்லாம் மணமக்களின் நண்பர்களோ உடன்பிறப்புகளோ தான் துணை பெண்ணாகவும் துணை மாப்பிள்ளையாகவும் திருமணத்தன்று இருப்பர். ஆனால் துணை பெண்ணாக இருப்பதையே தன் தொழிலாக மாற்றி அதில் சாதனை பெண்ணாகவும் வளர்ந்துள்ளார் ஜென்.
33 வயதாகும் இவர் Bridesmaid for hire எனும் நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார். இதில் திருமணத்திற்கு செய்யும் ஏற்பாடுகளை பற்றிய விரிவான course-களையும் ஆர்வமுள்ளோருக்கு சொல்லிக் கொடுக்கிறார். இவர் வருடத்திற்கு 20 முதல் 35 மணப்பெண்களுக்கு துணை பெண்ணாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு”, எனும் பழமொழிக்கேற்ப துணை பெண்ணாக இருப்பதன் மூலமாகவே எப்படி வாழ்வில் சாதிக்கலாம் என்பதற்கு ஜென் கிளாண்ட்ஸ் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பல பெண்களுக்கு ஜென் கிளாண்ட்ஸ் ஒரு Inspiration என்பது மறுக்க முடியாதது.
இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.