• July 27, 2024

 “எகிப்து பற்றிய நீங்கள் அறியாத சுவாரஸ்ய உண்மைகள்..!” – படித்துப் பாருங்கள்..

  “எகிப்து பற்றிய நீங்கள் அறியாத சுவாரஸ்ய உண்மைகள்..!” – படித்துப் பாருங்கள்..

Egypt

பழமையான பாரம்பரியம் கொண்ட நாடுகளில் ஒன்றாக எகிப்து நாட்டை கூறலாம். இந்த எகிப்து நாட்டை பற்றிய பலவிதமான விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்தக் கட்டுரையை பொறுத்தவரை நீங்கள் எகிப்தில் இருக்கக்கூடிய நீங்கள் அறிந்திராத சில சுவாரசியமான உண்மைகளை பற்றித்தான் படிக்க போகிறீர்கள்.

எகிப்தில் வசித்து வந்த பழமையான எகிப்தியர்கள் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கடவுள்கள் இருப்பதாக நம்பி இருக்கிறார்கள். எனவே இவர்கள் செய்யும் தொழில் மற்றும் வேறு பணிகளுக்காக ஒவ்வொரு தெய்வங்களையும் வணங்கி இருக்கிறார்கள். வாழ்க்கையை சம நிலையில் வைத்திருக்க தெய்வ வழிபாடு முக்கியம் என கருதி இருக்கிறார்கள்.

Egypt
Egypt

எகிப்தியர்கள் அனைவரும் பண்டைய காலத்தில் பூனையை ஒரு புனித விலங்காக நம்பினார்கள். எனவே பெரும்பாலான வீடுகளில் பூனையை செல்ல பிராணியாக வளர்த்ததோடு மட்டுமல்லாமல், இருந்த பூனை அதிர்ஷ்டத்தை தரும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தது.

பியூட்டி பார்லர்கள் இல்லாத அந்த காலத்திலேயே எகிப்திய ஆண்கள் மற்றும் பெண்கள் பாலின வேறுபாடு இல்லாமல் தங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சான்றாக இவர்கள் கண்களில் பூசிய வண்ண பூச்சு பச்சை நிறத்தில் உள்ளது. இதனை தாமிரத்தில் இருந்து தயாரித்திருக்கிறார்கள்.

Egypt
Egypt

அது மட்டுமல்லாமல் கருப்பு நிற சாயத்தை ஈயத்திலிருந்து தயாரித்தார்கள். இது போன்ற சாயங்களை பூசி கொள்வதின் மூலம் சூரியனிடமிருந்து பாதுகாப்பை பெற முடியும் என்று அவர்கள் நம்பி இருக்கிறார்கள்.

மேலும் எகிப்திய எழுத்துக்களில் 700 க்கும் மேற்பட்ட ஹைரோகிளிஃப்கள் உள்ளது. இதனை அறிந்து கொள்வதின் மூலம் நாம் பண்டைய சின்னங்களில் பின்னால் கொடுக்கப்பட்டிருக்க கூடிய பொருள் என்ன என்பதை எளிதில் கண்டறியலாம்.

Egypt
Egypt

எகிப்தில் இருக்கக்கூடிய மம்மிகளில் கட்டப்பட்டிருக்கும் கட்டுக்கள் சுமார் 1.6 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த கட்டுக்கள் எதற்காக பயன்படுத்தப்பட்டது என்பது இன்றுவரை அவிழ்க்க முடியாத ஒரு மர்மமாகவே நிலவி வருகிறது.

எகிப்தில் இருக்கக்கூடிய பிரமிடுகளிலேயே மிகவும் பெரிய பிரமிடாக குஃபுவின் பிரமிடு திகழ்கிறது. இந்த பிரமிட் கட்டமைப்பை பார்க்கும் போது அனைவருக்கும் மலைப்பு ஏற்படுகிறது. இந்த பிரமிட் ஆனது 16 எம்பயர் ஸ்டேட் கட்டிடங்களின் எடையை கொண்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

Egypt
Egypt

எகிப்தில் காணப்படும் பழமையான பிரமிடுகள் அனைத்தும் எகிப்திய ஆட்சியாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் கல்லறையாக இருக்கப்படும். சுமார் 130 க்கும் மேற்பட்ட பிரமிடுகள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்திய மக்களுக்கு மறுவாழ்வு பற்றி அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததின் காரணத்தால் தான் இறந்தவரின் உடலை பாதுகாக்க கூடிய மம்மிஃபிகேஷன் செயல் முறையை அவர்கள் கடைப்பிடித்து இருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் ஆன்மா வாழும் என்ற நம்பிக்கை இன்றும் அவர்களிடையே நிலவுகிறது.