• July 27, 2024

“60 ஆண்டுகளுக்குப் பின் கென்னடி படுகொலையில் அதிர்ச்சி திருப்பம்..!” – முன்னாள் அதிகாரியின் பரபரப்பு தகவல்..

 “60 ஆண்டுகளுக்குப் பின் கென்னடி படுகொலையில் அதிர்ச்சி திருப்பம்..!” – முன்னாள் அதிகாரியின் பரபரப்பு தகவல்..

Kennedy

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜான் எஃப் கென்னடி படுகொலை பற்றி பலருக்கும் தற்போது அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளை முன்னாள் அதிகாரி ஒருவர் பகிர்ந்து உள்ளது வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் போட்டுள்ளது என கூறலாம்.

ஏற்கனவே இந்த படுகொலையின் மர்மம் இதுவரை புரியாத புதிராக இருந்த வேளையில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கொலை பற்றிய புதிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Kennedy
Kennedy

மேலும் இந்த கொலை பற்றி பால் லாண்டிஸ் என்ற 88 வயதான புலனாய்வுத் துறையைச் சார்ந்த முன்னாள் அதிகாரி அதிபரின் மரணத்தை நெருக்கமாக அருகில் இருந்து கண்டவர் சில புதிய தகவல்களை கூறி பரப்பரப்பை ஏற்படுத்திவிட்டார்.

மேலும் அதிபர் கென்னடி சுடப்பட்ட பிறகு காரில் இருந்து ஒரு தோட்டாவை எடுத்து அதை மருத்துவ மனையில் கென்னடி ஸ்ட்ரெச்சரில் தான் விட்டு விட்டு சென்றதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்தக் கருத்தை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இவர் கூறியிருப்பது மிகப்பெரிய எதிர்பாராத ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படுகொலையில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் எத்தனை பேர் ஈடுபட்டார்கள். இறுதியில் இந்த கொலைக்கு யார் பொறுப்பு.. உண்மையில் எத்தனை தோட்டாக்கள் கென்னடியை தாக்கியது என்பது போன்ற சந்தேகங்களுக்கான விடைகளை இது தந்துள்ளது.

Kennedy
Kennedy

அதுமட்டுமல்லாமல் சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி இந்த கொலை அமெரிக்க அரசின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இருப்பதாகவும் இது ஒரு பெரிய தாக்குதலை ஏற்படுத்தும் அல்லது மாற்றத்தை உருவாக்காமல் போகலாம் என கூறி இருக்கிறார்கள்.

எனவே இந்த கருத்தின் மூலம் அதிபர் கென்னடியின் கொலையில் இதுவரை துலங்காமல் இருந்த மர்மம் தற்போது விலக வாய்ப்புகள் உள்ளது என கூறலாம்.

Kennedy
Kennedy

இதன் மூலம் இந்த வழக்கில் லாங் டிஸ் அளிக்கும் தகவல்கள் அமெரிக்காவின் மிகப்பெரிய தேசிய அதிர்ச்சிகளில் ஒன்றாக இருக்கும். மேலும் இந்த வழக்கு பற்றிய விஷயங்களில் இது நூறு சதவீதம் திருப்புமுனையாக அமையுமா? அல்லது விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்பது இனி வரும் காலங்களில் தான் தெரியவரும்.

எனினும் அறுபது ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு லாண்டிஸ் தற்போது இது பற்றி பேசி வருவது சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே இனி இந்த ஒற்றைத் தோட்டா பற்றிய விரிவான விளக்கங்கள் உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுமா? இல்லையா? என்பதை காலம் தான் உறுதி செய்யும்.