• July 27, 2024

தாலி மரபு எப்போது தோன்றியது? – இது தமிழர் பண்பாட்டு பழக்கமா?

 தாலி மரபு எப்போது தோன்றியது? – இது தமிழர் பண்பாட்டு பழக்கமா?

Thali

தாலி மரபு பழந்தமிழரின் பண்பாட்டு பழக்கமா? இந்த தாலி கட்ட கூடிய மரபு என்பது பலருக்கும் பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. அந்த சந்தேகங்களை தீர்க்கும் விதமாக இந்த கட்டுரை இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

தாலி என்ற வார்த்தையை பொருத்தவரை பனை ஓலை என்ற வார்த்தையில் இருந்து தான் வந்துள்ளது என்று கூறலாம். தாலமாகிய பனை ஓலையில் செய்யப்பட்டது தான் முதல் தாலி.

Thali
Thali

மேலும் இன்னாருக்கு இன்னார் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் பெயர்களை எழுதி மணமகளின் கழுத்தில் பண ஓலையை கட்டுவது மரபாக இருந்துள்ளதாக சில குறிப்புகள் உள்ளது.

மேலும் திருமணச் சடங்கை பனை ஓலையில் தான் முதலில் எழுதுவார்கள். அப்படி பனை ஓலையில் எழுதிய பிறகு ஓலைச்சுருலை சுருட்டி காதணி ஆக அணிந்து இருக்கிறார்கள். இந்த பழக்கம் இன்னும் கன்னியாகுமரி பகுதியில் நடைமுறையில் உள்ளதோடு அங்கு திருமணத்தின் போது பனம் கம்பை நட்டு, மாவிலையையும் கட்டுவார்கள்.

மேலும் சங்க இலக்கியங்களில் தாலி பற்றிய விவரங்கள் சில பாடல்களில் காணப்படுகிறது. அதில் தங்கத்தை தவிர்த்து வேறு சில பொருட்களையும் தாலியாக கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அகநானூறு ஏழாம் பாடலில்

Thali
Thali

“பொன்னோடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி”  என்ற பாடல் வரிகளில் காதலன் தன் காதலிக்கு வேட்டையாடிய புலியின் பல்லை மணிகளோடு கோர்த்து அளித்து இருக்கிறான். எனவே ஆரம்ப நாட்களில் புலிப்பல்லை தாலிகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம். நாளடைவில் அது மஞ்சள் பின் தங்கம் என மாற்றம் அடைந்திருக்கும்.

இதைப் போலவே புறநானூறில் “ஈகையரிய இழையணி மகளிர்” என்ற பாடல் வரிகளில் தாலி பற்றிய குறிப்பு காணப்படுகிறது. மேலும் தொல்காப்பியத்தில் திருமணம் பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் இரண்டு வகையான திருமணங்களை தொல்காப்பியர் விளக்கி இருக்கிறார்.

Thali
Thali

சங்ககாலத்தில் தாலி வேப்பம்பழம் போல இருந்தது என்பதை “புது நாண்” என்ற வார்த்தையோடு குறுந்தொகையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் தாலி அணிந்த பெண்களை வெள்ளிவீதியார் வாலிழைமகளிர் என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தாலியினை தாளம் பனை என்ற பனை ஓலையில் செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் உண்மையின் அடையாளமாக இதை கருதி இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் தால் என்ற சொல் இயல்பையும், இயற்ப பொருளையும் குறிக்கிறது. மேலும் இது தாலால் ஆனதால் தாலி என்று அழைக்கப்படுகிறது.

இப்போது உங்களுக்கு தாலியின் மரபு எப்படி ஏற்பட்டது என்பது மிக நன்றாக புரிந்து இருக்கும் என நம்புகிறோம்.

தமிழர்களின் திருமணத்தில் தாலி? அதிர்ச்சியளிக்கும் பல மறைக்கப்பட்ட உண்மைகள்! வீடியோ பதிவு