எங்கே? மனித நேயம்!
ஏய் மானிடா!
மனித நேயம் ஒன்று இருப்பின்
அன்னமாகிய அன்னாசியின் நடுவே,
அணுகுண்டு வைப்பாயா?
நம்மை நம்பி வந்த தந்தியை
நஞ்சிட்டு கொன்ற
வஞ்சகனே!
உன்னை வஞ்சிட
வார்த்தைகள் இல்லையடா பாவி!
தம்மை நாடி வந்ததால்,
நால்வாய் பிளந்து – தன்
நாடி இழந்து ,
நாட்கள் ஆனதடா துரோகி!
ஆடாமல் அசையாமல்,
வெள்ளியர் ஆற்றின் நடுவே,
ஆழத்தை மறந்து,
தன்னோடு தன் கருவையும்,
கறுக்கியப் பாவி
எவனோ?
ஏய், இயற்கையே
எரித்து விடு அவனை!
அவன் சாம்பலும் – கரையாமல்
சுற்றி திரியட்டும் ஆவியாய், பாவியாய்!!!
K. கார்த்திக்
செஞ்சிக் கோட்டை,
விழுப்புரம் மாவட்டம்.