• April 18, 2024

Day: December 26, 2021

மீண்டும் வருகிறதா இரவு நேர ஊரடங்கு ???

நாட்டின் தலைநகரான டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு விதிக்கப்படும் என நகர அரசாங்கம் என்று கூறியுள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுக்குள் வைக்க இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமாணமாக Omicron வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நாளை இரவு முதல் இரவு நேர […]Read More

இனி வரும் I-phone-களில் Sim Card போட முடியாதா ???

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் XR மற்றும் XS ஆகிய மாடல் போன்களில் e-sim தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இனி வெளியாகும் எந்த ஒரு ஐ-போனிலும் சிம் கார்டுகள் பொருத்தம் படி slot-கள் இருக்காது எனவும், e-sim முறையே தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 2023ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ள ஐபோன் 15 pro சிம் கார்டு slot இல்லாமல் e-sim மூலம் இயங்கும் ஐபோன் மாடலாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அவர்களுடைய நெட்வொர்க் சேவை மையத்திற்கு […]Read More

விண்வெளியில் இப்படித்தான் முடி வெட்டுவார்களா !!!

ஒரு புதிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வழக்கமான வரம்புகளைத் தாண்டி மனித திறன்களை நிரூபிக்கிறது. ஒரு விண்வெளி வீரர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. விண்வெளி வீரர் மத்தியாஸ் மவுரர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் வின்கலத்திற்குள் சிகை அலங்காரம் செய்துகொள்வதை காணலாம். அங்கு இருக்கும் சகா ஊழியர் மவுரருக்கு முடி வெட்டி விடுகிறார். பூமியிலிருந்து இந்த […]Read More

KFC ஆர்டரில் கோழியின் தலை ! வாடிக்கையாளர் அதிர்ச்சி !

இந்த பதிவு ஒவ்வொரு உணவு பிரியர்களும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு விஷயத்தை பார்க்க கூடாது என்று நினைக்க வைக்கும் ஒரு பதிவாகும். ஒரு கேஎஃப்சி வாடிக்கையாளர் தனது கேஎஃப்சி ஹாட் விங்ஸ் பெட்டியில் ஒரு முழு கோழியின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தான் ஆர்டர் செய்த உணவில் இந்தக் கோழியின் தலை இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த டெலிவரிக்கு 2 ஸ்டார் ரிவ்யூ கொடுத்த அந்த வாடிக்கையாளர், “எனது சூடான விங்ஸ் உணவில் […]Read More

ஒட்டகத்தில் சென்று தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர் !!!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்ஷுக்ஹ் மண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. ஒரு பெண் சுகாதார பணியாளர் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வது போன்ற ஒரு மனதை கவரும் படத்தை அவர் பதிவிட்டுள்ளார். Covid-19 தடுப்பூசி செலுத்துவதற்காக ஒட்டகத்தில் ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த சுகாதார பணியாளர் சென்று கொண்டிருக்கிறார். நாட்டின் கடைசி நபருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு எவ்வளவு தீவிரம் காட்டுகிறது […]Read More

Kit Kat-ஐ கத்தியாக உபயோகிக்கலாமா ???

நம்மில் நிறைய பேர் கிட் கேட் சாக்லேட்-ஐ விரும்பி சாப்பிடுவது உண்டு. அப்படிப்பட்ட கிட் கேட்டை கத்தி போல உபயோகிக்கும் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீங்கள் வழக்கமாக சமூக வலைதளங்களில் உலா வருபவர் என்றால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான கேள்விகளை எழுப்பும் சில வினோதமான வீடியோக்களை நீங்கள் அவ்வப்போது காண்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அப்படி உங்களுக்குள் கேள்வியைக் எழுப்பும் ஒரு வீடியோவை பற்றிய பதிவுதான் இது. இந்த வீடியோவில் ஒரு நபர் கிட்கேட் […]Read More

கடற்கரை மணலில் 50 அடி நீள சாண்டா கிளாஸ் !!!

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புகழ்பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் சனிக்கிழமை (டிசம்பர் 25, 2021) ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் சாண்டா கிளாஸின் 50 அடி நீளமும் 28 அடி அகலமும் கொண்ட மணல் சிற்பத்தை உருவாக்கினார். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் அவர் உருவாக்கிய மணல் கலையின் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். சுமார் 5,400 சிவப்பு ரோஜாக்களை பயன்படுத்தி இந்த சாண்டா கிளாஸ் உருவத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த கலையின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த […]Read More