• October 7, 2024

“உலகளந்தான் கோல்” கொண்டு நிலத்தை துல்லியமாக அளவிட்டானா தமிழன்..! – ஆச்சரியமான உண்மைகள்..!

 “உலகளந்தான் கோல்” கொண்டு நிலத்தை துல்லியமாக அளவிட்டானா தமிழன்..! – ஆச்சரியமான உண்மைகள்..!

விஞ்ஞான வளர்ச்சி எட்டிப் பார்க்காத காலத்திலேயே வியக்கத்தகு பணிகளை செய்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களின் கோரிக்கையை ஏற்று நிலங்களை அளப்பதற்காக உலகளந்தான் கோல் பயன்பாட்டில் இருந்துள்ளது.

இந்தக் கோலினை பயன்படுத்தி தான் நிலத்தை அளந்திருப்பார்கள். மேலும் வரி சலுகைகளை வழங்க நிலங்களை அளக்க இந்த கோல் பயன்படுத்தபட்டு உள்ளது. மேலும் இந்த கோலை வரைபடமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

இதனை சில கல்வெட்டுகள் கூறி இருக்கிறது. மேலும் 16 ஜான் அளவுகோலாக இது இருந்துள்ளது. சோழர் காலத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கிய வீரசோழபுரத்தில் தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த நில அளவுகோல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

உலகிலேயே சோழர்கள் ஆட்சிக் காலத்தில் தான் சோழமண்டலத்தை பல வள நாடுகளாகப் பிரித்தனர். அந்த நிலங்களை அளப்பதற்கு பதினாறு ஜான் அளவு உடைய கோல் பயன்படுத்தப்பட்டது. எனவே தான் இந்த கோலை உலகளந்தான் கோல் என்று அழைக்கிறார்கள். மேலும் கிபி ஆயிரத்தி ஒன்றாம் ஆண்டு தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த அளவீட்டுப் பணியை அரசு முழுமையாக செய்து முடித்தது.

நிலப்பரப்பை கணக்கிட வேலி, குழி, சதுர ஜான், சதுரவில், சதுர நூல் போன்றவை அளகீடுகளாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் கல்வெட்டுக்கள் மூலம் இதனை நாம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த கல்வெட்டின் படி 16 ஜான் கோலானது 256 குழிமா என்ற வாக்கியத்தில் இருந்து 16 ஜான் நீளம் ஒரு கோல் என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே 256 ஜான் என்பது ஒரு குழி என்ற நிலையை குறிக்கிறது. இதுவே சோழர்கள் நிலத்தை அளக்க பயன்படுத்திய நில அளவை முறை என்று கூறலாம்.

நில அளவீடு செய்யக்கூடிய முறை மேடை நாடுகளில் ஏற்படுவதற்கு முன்பே 85 ஆண்டுகளுக்கு முன்னரே அதை நம் சோழ மன்னர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் நிலத்தை அளவெடுக்க கயிறுகளை தான் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் இது பற்றிய விவரங்கள் அனைத்தும் சோழபுரம் கோவிலில் உள்ள ஏழு கல்வெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறையை பயன்படுத்தி அவர்கள் வரி வசூலிலும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இது மட்டுமல்லாமல் கள்ளக்குறிச்சிக்கு அருகே இருக்கும் கூகையூர் என்ற ஊரில் ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது. அந்த கோயிலிலும் நில அளவுகோல் குறித்து கல்வெட்டுகளில் செய்திகள் உள்ளது.

இப்போது புரிந்திருக்கும் விஞ்ஞானம் வளராத காலத்திலும் தமிழன் எப்படி செயல்பட்டான் எவ்வளவு அறிவு கூர்மையோடு இருந்தான் என்று.