• November 14, 2024

பூமியில் இருந்து அழிந்து போன உயிரினங்கள் என்னென்ன தெரியுமா? – படித்தால் பிரமித்து போவீர்கள்..!

 பூமியில் இருந்து அழிந்து போன உயிரினங்கள் என்னென்ன தெரியுமா? – படித்தால் பிரமித்து போவீர்கள்..!

Extinct Nopes

டைனோசரை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும் .ஏற்கனவே பூமியில் இருந்து அழிந்த ஒரு மிகப்பெரிய உயிரினங்களின் ஒன்றாக இவை திகழ்கிறது. குறிப்பாக இந்த விலங்கானது 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்தது. அதன் பின் இந்த உயிரினம் அழிந்தது போலவே பல உயிரினங்கள் அழிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அந்த வகையில் இன்று நமது உலகில் இருந்து அழிந்து போன விலங்குகள் பற்றி பார்க்கலாம்.

1.ஹலுசினீயா

இது பார்ப்பதற்கு புழுவைப் போல தோற்றம் அளிக்கும். மேலும் முதுகு எலும்பு இல்லாத இனத்தைச் சேர்ந்த இரு கடலின் அடிப்பகுதியில் வாழக்கூடியது. இதனுடைய பாசில்ஸ் 1911 ஆம் ஆண்டு கனடாவில் கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதும் கூர்மையான முனையோடு காணப்படும். இவை பார்ப்பதற்கே சற்று அருவருப்பாக தான் இருக்கும். கனடாவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த பாசிலின் வயது தோராயமாக 58 மில்லியன் ஆண்டுகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Tiktaalik
Tiktaalik

2.டிக்டாலிக் மீன்

இந்த மீனானது சுமார் 380 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆர்டிக் கனடாவில் வசித்து வந்துள்ளது. இதனுடைய புகை படிமங்கள் 2004 ஆம் ஆண்டு எல்லெஸ்மியர் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அரை நீரில் வாழும் உயிரி என்று கூறலாம். நீர் மற்றும் நிலப்பரப்பில் வாழக்கூடிய வகையில் உடல் அமைப்பு இருந்தது. மேலும் நீர் மற்றும் நிலத்தில் வாழக்கூடிய முதல் உயிரினமாக இந்த மீன் கருதப்பட்டது. இதற்கு நெகிழ்வான கழுத்து, தலை, நுரையீரல் போன்றவை ஊர்வனவற்றில் உள்ளது போல் இருந்ததால் தான் இது நிலத்தில் வாழ்வது சாத்தியமானது.

3.புல்மோஸ்கார்பியஸ் கிர்க்டோனென்சிஸ்

Pulmonoscorpius kirktonensis
Pulmonoscorpius kirktonensis

இந்த பூமியிலேயே இது வரை இருந்த செயல்களை விட மிகப்பெரிய தேளாக இது விளங்கியுள்ளது. சுமார் 70 சென்டிமீட்டர் நீளம் கொண்ட இது 340 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாந்து பகுதியில் வாழ்ந்து வந்துள்ளது.

4.ஹெலிகோப்ரியன்

நடுவே சுழலக் கூடிய வகையில் பற்களை கொண்டு இருக்கக்கூடிய அதிசயமான இந்த உயிரினம் தர்மின் காலத்தில் அதாவது 290 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் வசித்து வந்துள்ளது. மேலும் 1897 ஆம் ஆண்டு பர் மாகாணத்தில் இதனுடைய பல் சுழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுறா போன்ற அமைப்போடு இருக்கும். இந்த மீனின் பல் கட்டமைப்பு வித்தியாசமாக காணப்படுகிறது.

இன்னும் இது போன்ற அரிய உயிரினங்கள் பூமியில் வாழ்ந்து அழிந்து போய் உள்ளது.