இறந்த நண்பரை பிரிய மனதில்லாத மயில் ! வைரலாகும் வீடியோ !
வேடிக்கையான பூனை மற்றும் நாய் வீடியோக்கள் முதல் விலங்குகளின் அன்பை வெளிப்படுத்தும் மனதை கவரும் பல சுவாரசியமான வீடியோக்கள் வரை அனைத்தும் கிடைக்கும் அழகான இடமாக இணையம் மாறியுள்ளது. அந்த வகையில் ஒரு பாசமுள்ள மயிலின் வீடியோவை பற்றிய பதிவுதான் இது.
ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் இணையத்தில் பகிர்ந்த இந்த வீடியோ அனைவரின் மனதையும் மயிலிறகால் வருடுகிறது என்றே கூறலாம். மயில் ஒன்று இறந்த தனது நண்பரை அடக்கம் செய்ய அழைத்துச் செல்லும்போது அதனை பின் தொடர்ந்து நடந்து கொண்டு செல்லும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்த போது அது நெட்டிசன்களின் கண்களை கவர்ந்தது. “மரணத்திற்குப் பிறகு கூட அந்த மயில் தனது நண்பரை விட்டு பிரிய விரும்பவில்லை, இது ஒரு மனதை தொடும் வீடியோ” என இந்த வீடியோவிற்கு பிரவீன் caption கொடுத்துள்ளார்.
இறந்துபோன மயிலின் உடலை அடக்கம் செய்வதற்காக இரண்டு மனிதர்கள் அந்த மயிலை தூக்கி செல்லும் போது அதன் நண்பரான இன்னொரு மயில் அந்த இரண்டு நபர்களை தொடர்ந்து பின் தொடர்கிறது. மனிதனுக்கு மட்டுமல்ல மயில்களுக்கும் பிரிவு வலியை தரும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
இந்த சம்பவம் ராஜஸ்தானில் குபேரா நகரத்தில் நடந்ததாக பிரவீன் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவிற்கு 15 ஆயிரத்திற்கும் மேல் Like-களும் 2000 Retweet-களுக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு தங்களது சுவாரசியமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இந்த வீடியோவை பார்த்து கண்கலங்கி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மனதை உருக வைக்கும் இந்த மயில் வீடியோ பாசத்தை புரிந்து கொள்ள வேண்டிய அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பிரவீன் தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்த மனதை தொடும் மயில் வீடியோவை கீழே உள்ள ட்விட்டர் பதிவில் காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.