எரிபொருள் விலையேற்றத்தால் கவிழ்ந்த அரசாங்கம் !!!
உலகெங்கும் பல நாடுகளில் எரிபொருளின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒவ்வொரு நாளும் மக்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகும் விதத்தில் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது.
உலகிலேயே முதல் முறையாக எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஒரு நாட்டின் ஆட்சியே கவிழ்ந்துள்ளது. ஆட்சி கவிழும் அளவிற்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
ஆப்கானிஸ்தானை அடுத்துள்ள கஜகஸ்தான் நாட்டில் வாகன எரிபொருள் விலை ஏற்றத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து பல நாட்கள் போராடி வந்துள்ளனர். மக்களின் இந்த கோரிக்கைக்கு அரசாங்கத்தால் பெரிய அளவில் செவிசாய்க்க முடியவில்லை.
மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகும் எரிபொருளின் விலையை குறைக்க முடியாத காரணத்தால் கஜகஸ்தான் நாட்டின் பிரதமர் அஸ்கர் மாமின் திடீரென நாட்டு பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இந்த செய்தி கஜகஸ்தான்-ஐ மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உலகத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்சி கவிழ்ந்துள்ளது உலகிலேயே இதுதான் முதல் முறை.
இச்சம்பவம் எரிபொருள் விலையை ஏற்றி கொண்டே போகும் பல நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. மக்களின் அத்தியாவசிய தேவையான எரிபொருளை மக்களால் கொடுக்க முடிந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
கஜகஸ்தான் நாட்டில் பிரதமரின் திடீர் பதவி விலகளால் அந்த நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் சார்ந்த அடுத்தகட்ட முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என கஜகஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் ஒன்று கூடி போராடியதன் விளைவு எவ்வளவு வீரியமாக இருக்கக் கூடும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. நாட்டின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதே இச்சம்பவம் உலகநாடுகளுக்கு உணர்த்தும் பாடம்.
கஜகஸ்தான் நாட்டில் ஆட்சி கவர்ந்துள்ளதை அடுத்து அந்த நாட்டில் அடுத்து வரும் ஆட்சியாளர்கள் எரிபொருளின் விலையை குறைபார்கள் என மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.