• October 3, 2024

கிளியோபாற்றா (Cleopatra) மர்ம கல்லறை

 கிளியோபாற்றா (Cleopatra) மர்ம கல்லறை

மர்மம்!

நம்ம கண்களுக்கு, அறிவுக்கு புலப்படாத, புலன்களுக்கு அப்பாற்பட்ட எல்லாத்துக்குமே மர்மம்னு ஒரு பேரு குடுத்துடலாம்..! (Cleopatra)

நீங்க ஒரு அறையில இருக்கீங்க, அங்கே என்னென்ன இருக்குன்னு ரொம்ப முன்னாடியே சரியா பாத்து மனசுல பதிய வைக்கலாம். பொதுவா செய்ய மாட்டோம்.

திடீர்னு கரண்ட் போய்டுச்சுன்னு வெச்சுக்கோங்க. அந்த அரை குறை வெளிச்சத்திலேயே, அல்லது கும்மிருட்டுலயோ ஒரு சாதாரண பொருள் கூட உங்கள பயமுறுத்தும், ஒரு கற்பனையா மாறி அலற வைக்கும். அப்பறம் வெளிச்சம் வந்து நம்ம கண்களாலே பார்க்கும்போதுதான் புரியும். சில சமயம் அப்போ கூட புரியாம போய்டும். அதை எல்லாம் மர்மத்துல சேத்துட வேண்டியது தான்.

இதெல்லாம் தனிப்பட்ட பயங்கள், மர்மங்கள். உலக அளவிலா மர்மங்கள் பத்தி பேச ஏகப்பட்டது இருக்கு. இங்கே அதை எல்லாம் ஒன்னொன்னா சுவாரஸ்யமா படிக்க போறோம்…

ரொம்ப அழகா இருக்கற பெண்களை, கிளியோபாற்றா மாதிரி இருக்கான்னு தானே சொல்வாங்க.

கிளியோபாற்றா (Cleopatra)

நம்ம எல்லாருக்கும் நல்லா தெரிஞ்ச ஒரு பேரு கிளியோபாற்றா.

ரொம்ப அழகா இருக்கற பெண்களை கிளியோபாற்றா மாதிரி இருக்கான்னு தானே சொல்வாங்க.

பேரழகி… மன்னர்களை எல்லாம் கிறங்கடிக்க வெச்சவ… அவளின் காதலர் மார்க் ஆன்டனி.

30 BC-ல அவங்க இரண்டு பேரும் இறந்தப்பறமா, ஒரே கல்லறையில் தான் புதைச்சாங்க.

காதலன் ஆன்டனி இறந்தப்பறமா, தானே தன்னை மாட்சி இறந்து போனா கிளியோபாற்றா. அதுவும் எப்படி தெரியுமா? தன்னை ரொம்ப அழகா அலங்கரிச்சிகிட்டு, வாசனை திரவியங்கள் சூழ பாம்புகளை கொத்த விட்டு செத்து போனா.

அந்த கல்லறை முழுக்க தங்கம், முத்து, வைரம் இன்னும் பல பரல்களால நொப்பினாங்க. தேர்ந்த தந்தங்கள் எல்லாம் உள்ளே அடுக்கினங்களாம்.

ஆனா மர்மம் என்னென்னா, இப்போ வரைல அந்த கல்லறை எங்கே இருக்குண்ணே யாருக்கும் தெரியல.

2010-ல எகிப்தின் அமைச்சர்கள் இதை ஒரு பெரிய பொறுப்பா எடுத்துக்கிட்டு ஆழ தோண்டி ஆராய்ச்சிகள் எல்லாம் பண்ணினாங்க. கிளியோபாற்றா ஆண்ட காலத்திலே இறந்த எத்தனையோ பேரோட கல்லறைகளை கண்டு புடிக்க முடிஞ்சுது. ஆனா இது வரைல அவளோட கல்லறையை கண்டடைய முடியல.

ஒரு வேலை ரொம்ப ஆழமா தோண்டி பொதச்சிருக்கலாம். அல்லது அழிஞ்சி கரைஞ்சி மண்ணோட மண்ணா போயிருக்கலாம்ன்னு எல்லாம் ஆராய்ச்சியாளர்கள் பைலை மூடிட்டாங்களே ஒழிய, விடை கிடைத்த பாடில்லை. இது இப்போ வரைல ஒரு தீராத மர்மம் தான்.

இன்னொரு சுவாரஸ்யமான மர்மத்தை அடுத்த Article-ல படிக்க காத்திருங்க..

அடுத்த மர்மம் பார்க்க: