“அப்துல் கலாமின் அற்புத தன்னம்பிக்கை வரிகள்..!”- நீங்களும் நம்பிக்கையோடு படியுங்கள்..!
ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல் கலாம் தன்னுடைய நம்பிக்கையால் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். மேலும் நேருவைப் போலவே குழந்தைகளிடம் அன்பாக பழகக்கூடியவர்.
ஒவ்வொருவரும் கனவோடு வாழ வேண்டும் என்பதை இவர் மிகவும் சிறப்பான முறையில் கூறி இருப்பதோடு அந்த கனவினை அடைய கடுமையான முயற்சி மற்றும் உழைப்பு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
முடியாது என்று யார் சொன்னாலும் அது ஒரு நோயைப் போன்றது. அது நம்மை அழித்து விடும். அதுவே நம்மால் முடியும் என்று நம்பினால் நிச்சயம் அனைத்தும் நன்மையாய் நடக்கும்.
ஒவ்வொருவரும் தான் செய்யக்கூடிய செயல்களில் உறுதியும், நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவருக்கும் தலைமை பண்பு ஏற்பட வேண்டும். எல்லாவற்றையும் ஆசையோடு செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களால் எதையும் சாதிக்க முடியும்.
நீங்கள் அனைவரும் நல்ல முறையில் சிந்தனை செய்ய வேண்டும். அதன் மூலம் உங்களுடைய நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் வெற்றி இலக்கை அடைய சிறப்பான சிந்தனையோடு இலக்கைகளை நோக்கி முன்னேற கூடிய உழைப்பினையும் நீங்கள் செய்ய வேண்டும்.
இளைஞர்கள் முக்கியமாக கனவு காண வேண்டும். பின்னர் அந்த கனவுகளை நோக்கி பயணிக்க உங்களது எண்ணங்களை செயலாக்க முயற்சி செய்ய வேண்டும். உங்களால் முடியாதது எதுவுமே இல்லை என்ற அளவுக்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
நீங்கள் இமயத்தை அடைவதென்றாலும் சரி, உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உங்களுக்கு தேவை மன உறுதி, எப்போதும் எதிலும் மன உறுதியோடு செயல்படுவதன் மூலம் மகத்தான வெற்றிகளை நீங்கள் அடைய முடியும்.
தோல்வி ஏற்பட்டால் சோர்வதை தவிர்த்து விட்டு இது வெற்றிக்கான படி என்பதை புரிந்து நடந்தால் வெற்றி உங்கள் காலடியில் வந்து சேரும். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அப்படியே ஆவீர்கள். நிச்சயமாக உங்களை நம்பி முயற்சி செய்யுங்கள்.
எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டு நீங்கள் வெற்றி பெறுவது தான் மகத்தான வெற்றியாகும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டால் உலகமே உங்களை திரும்பிப் பார்க்கும்.
எனவே எதையும் எதிர்பார்க்காமல் உங்கள் கனவுகளை நினைவாக்க நீங்கள் லட்சியத்தோடு பயணத்தை மேற்கொள்ளுங்கள். விரைவில் வெற்றி இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள்.