• July 27, 2024

உங்களுக்கு பயம் இல்லையா..? – அப்ப இந்த Envaitenet Island – குள்ள போக முடியுமான்னு பாருங்க..!

 உங்களுக்கு பயம் இல்லையா..? – அப்ப இந்த Envaitenet Island – குள்ள போக முடியுமான்னு பாருங்க..!

இந்த உலகில் இது வரை அவிழ்க்கப்படாத மர்மங்கள் பல உள்ளது. அந்த வகையில் இன்று என்வைட்டினெட் (Envaitenet Island) தீவில் ஒளிந்து இருக்கும் மர்மத்தை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 

கென்யாவில் இருக்கக்கூடிய பாலைவன கடலான துர்கானா ஏரி மிகச்சிறந்த சுற்றுலா தலமாக பயணிகளால் கவரப்பட்டுள்ளது என்பதால் இந்த பகுதிக்கு அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

இங்கு இருக்கக்கூடிய தீவின் பெயர் என்வைட்டினெட் தீவு (Envaitenet Island) என்பதாகும். இந்த தீவின் பெயருக்கான அர்த்தமானது “திரும்பி வராது” என்பதாகும். அதாவது இந்த தீவுக்குள் வந்தவர்கள் யாரும் இது வரை திரும்பிச் சென்றதில்லை என்பதை குறிக்கும் வகையில் தான்  இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

ஒரு காலத்தில் இந்த தீவில் நிறைய மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். அப்போது அவர்கள் வியாபாரம் நிமித்தமாக பக்கத்தில் இருந்த தீவுகளுக்கு சென்று வந்திருக்கிறார்கள். மேலும் ஒரு காலகட்டத்தில் இத்தீவின் மக்கள் தொகையானது முற்றிலும் குறைந்துள்ளது.

இதனை அடுத்து அருகில் இருந்த தீவை சார்ந்த மக்களும் அது பற்றிய விஷயங்களை கண்டறிய இந்த தீவுக்குள் சென்ற பின் திரும்பி வரவில்லை. இதனால் இந்த தீவு ஒரு மர்ம தீவாக மாறியது.

 

மேலும் இந்த மர்மத்தை கண்டறிவதற்காக ஆங்கில விஞ்ஞானி விவியன் தனது குழுவோடு சில ஆய்வுகளை அங்கு மேற்கொண்டார்.ஆனால் நாட்கள் சென்றதே ஒழிய அந்த விஞ்ஞானியும் அவரோடு சென்றவர்களும் திரும்பி வரவே இல்லை.

 

அதுமட்டுமல்லாமல் அங்கு வசித்து வந்த மக்களின் குடிசைகள் அப்படியே இருக்கிறது.ஆனால் மனிதன் நடமாட்டம் இல்லை என்று பக்கத்து தீவை சேர்ந்த மக்கள் கூறி இருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் அந்த மர்ம தீவில் ஒரு பிரம்மாண்டமான ஒளி தோன்றும். அந்த சமயத்தில் மனிதர்கள் யார் இருந்தாலும் காணாமல் போய்விடுவார்கள் என்ற கருத்தினை அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

 

எனினும் இது குறித்த உண்மை நிலை என்ன என்பது இதுவரை விளங்காத புதிராகவே உள்ளதால், இந்த பகுதி மர்மமான பகுதியாகவே தற்போது வரை விளங்குகிறது.

 

இதற்கான விடையை கண்டறிய நீங்கள் கூட இத்தீவை நோக்கி செல்லலாம். எது எப்படியோ தீவின் மர்மம் விடுபட்டால் எல்லோருக்கும் அது மகிழ்ச்சியை அளிக்கும். என்ன நாங்கள் கூறுவது சரிதானே.