• July 27, 2024

இராவணனின் பத்து தல 10 வகை கலைகளா? – மறைக்கப்பட்ட வரலாறு..!

 இராவணனின் பத்து தல 10 வகை கலைகளா? – மறைக்கப்பட்ட வரலாறு..!

Ravana

இலங்கையில் இது வரை யாரும் இந்த அளவு அரசாட்சி செய்ததில்லை என்று கூறும் அளவுக்கு இராவணன் படு நேர்த்தியான முறையில் ஆட்சி செய்ததோடு மக்களை செல்வ செழிப்பில் வைத்திருந்தான்.

 

இலங்கையை ஆண்ட நாகர் இனத்தைச் சேர்ந்த கைகைசிக்கும், ஏகர் இனத்தைச் சேர்ந்த வஜ்ரவாக்கும் பிறந்தவன் தான் இந்த இராவணன். இவனுடன் பிறந்தவர்கள் கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன்.

Ravana
Ravana

மிகச் சிறந்த சிவபக்தனான இராவணனை அரக்கன் என்று சிலர் முத்திரை குத்தி இருக்கிறார்கள். ஆனால் இராவணனை கடவுளாக இந்தியாவில் குறிப்பாக ஆந்திரா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பழங்குடி மக்கள் வழிபடப்பட்டு வந்திருக்கிறார்கள்.

 

மேலும் இராவணன் இலங்கையை ஆண்ட காலத்தில் தான் சிவபெருமானுக்காக ஆறு கோயில்கள் அங்கு கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. அது மட்டும் அல்ல இராவணன் தனது கை நரம்புகளை அறுத்து அதன் மூலம் வீணை செய்து அந்த வீணையிலிருந்து இசையை எழுப்பி சிவனை வழிபட்டதினால் தான் இராவணேஸ்வரன் என்ற ஈஸ்வரன் பட்டத்தை பெற்றான்.

Ravana
Ravana

பத்து தலை கொண்ட அரக்கன் என்று சித்தரிக்கப்பட்ட இராவணனுக்கு 10 தலைகள் உண்மையில் இல்லை. அந்தப் பத்து தலைகள் என்பது உண்மையில் 10 விதமான கலைகளை குறிக்க கூடியது தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

 

அட அப்படி என்ன பத்து விதமான கலைகள் என்று நீங்கள் நினைக்கலாம். அந்தக் கலைகள்

 

1.மனோத்துவம்

2.மருத்துவம்

3.மந்திரம்

4.தந்திரம்

5.அரசியல்

6.இசை

7.வான சாஸ்திரம் 8.இலக்கியம்

9.விஞ்ஞானம்

10.ஜோதிடம்

 

இந்த பத்து கலைகளையும் தான், பத்து தலைகள் என்று  உருவகப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் இராவணனின் மனைவி பெயர் மண்டோதரி. இவளும் தீவிர சிவ பக்தி கொண்டவள். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் மேகநாதன் என்று அழைக்கப்படும் இந்திரஜித் மற்றும் அக்ஷய குமாரன்.

Ravana
Ravana

இராவணனின் வரலாறு பற்றிய உண்மை நிலை என்ன என்பது தெரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் வட இந்தியாவிலேயே இராவணனுக்கு நிறைய கோயில்கள் உள்ளது, உங்களுக்கு நன்றாகவே தெரியும். யாரும் அரக்கனுக்காக கோயில் கட்டி வழிபட மாட்டார்கள். அதற்காகத்தான் இராவணனின் வரலாற்றின் உண்மை நிலையை அறிய நாம் முயற்சி செய்ய வேண்டும்.