• July 27, 2024

“வாக்னர் தலைவர் மரணம்..!”. – ஸ்கெட்ச் போட்டது யார்? வார்னிங் செய்யும் அமெரிக்கா..

 “வாக்னர் தலைவர் மரணம்..!”. – ஸ்கெட்ச் போட்டது யார்? வார்னிங் செய்யும் அமெரிக்கா..

Prigogine

தனியார் நிறுவனங்களைப் போல ரஷ்யாவில் பிரைவேட்டாக செயல்படும் ராணுவத்தை தான் வாக்னர் குரூப் என்று அழைக்கிறார்கள். இந்த குழுவானது 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த குழுவின் பணியை பொறுத்தவரை ரஷ்ய அரசால் நேரடியாக செய்ய முடியாத எந்த ஒரு செயலையும், மறைமுகமாக செய்து முடிக்க கூடிய ஆற்றல் கொண்டதாக திகழ்ந்தது.

இந்த குழுவினரைக் கொண்டு வெளிநாட்டு, உள்நாட்டு தலைவர்களை வஞ்சம் தீர்ப்பது, சம்பவம் செய்வது போன்ற பணிகளை நேர்த்தியான முறையில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Prigogine
Prigogine

மேலும் ரஷ்ய இராணுவத்திற்கு உதவி செய்வது போல பணிகளை செய்து வந்த இந்த அமைப்பை 1999 முதல் 2009 வரை ரஷ்யாவின் பல்வேறு ராணுவ பிரிவுகளில் உளவு வேலையை பார்த்திருக்கிறார்கள். இந்த அமைப்பை உருவாக்கியவர் உட்கின்.

தற்போது இந்தக் குழுவின் தலைவராக பிரிகோஜின் இருக்கிறார். இவர் புடினுக்கு மிகவும் நெருக்கமானவர். இந்த சூழ்நிலையில் கடந்த மாஸ் மாதம் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் தலைமையில் உக்ரைனில் இருந்த  படையினர் மாஸ்கோவை நோக்கி நகர்ந்து வந்த போது ரஷ்ய இராணுவத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் இந்த குழுவை ராணுவத்தில் இணைக்க வேண்டும் என்ற கருத்து அவர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Prigogine
Prigogine

மேலும் இந்தக் குழுவை சேர்ந்த சிலர் ரஷ்ய ராணுவத்தை தாக்கியதால் மோதலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால் உள்நாட்டு போர் ஏற்பட்டு புடின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்ற கருத்து நிலவியது.

நிலைமை மோசமாக சென்று கொண்டிருந்த நிலையில் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லூகா ஷென்கோ நடத்திய பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு ஏற்பட வாக்னர் குழு திரும்பிச் சென்றது.

மேலும் வாக்னர் குழுவின் தலைவர் பெலாரஸ் செல்ல முடிவு செய்து இருப்பதாக தெரியவந்ததோடு, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் சிஐஏ தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Prigogine
Prigogine

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் பல பில்லியன் டாலர்கள் கொடுத்து வாக்னர் குழுவின் தலைவரை விளக்கி வாங்கி புடின் அரசை கவிழ்க்க சதி செய்வதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜிங் பலியாகி இருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில் இந்த மரணத்திற்கு காரணம் ரஷ்ய அரசின் சூழ்ச்சியாக இருக்கலாம் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளது. மேலும் இந்த விபத்தானது உலகையே உலுக்கி உள்ளது.

 இதனை அடுத்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முக்கிய புகார்களை எடுத்து வைத்ததோடு, வாக்னர் மேற்கொண்ட புரட்சியை புடின் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்ததோடு மட்டுமல்லாமல் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.