• November 5, 2024

“யானைகளின் உடலில் தோல் சுருக்கங்கள் அதிகம் இருப்பதின் காரணம்..! – ஓர் அறிவியல் விளக்கம்..

 “யானைகளின் உடலில் தோல் சுருக்கங்கள் அதிகம் இருப்பதின் காரணம்..! – ஓர் அறிவியல் விளக்கம்..

Elephant

காடுகளில் இருக்கும் யானை மனிதர்களுக்கு பிடித்த அற்புதமான விலங்கினம் என கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானை என்றாலே ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்ப்பார்கள்.

அந்த அளவு மனதில் குதூகலத்தை ஏற்படுத்துகின்ற யானையைப் பற்றி சில அறிவியல் உண்மைகளை தான் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளப் போகிறோம்.

Elephant
Elephant

பார்ப்பதற்கு மிகப் பெரிய கருப்பான உருவமாக இருக்கக்கூடிய யானை, ஆடி அசைந்து நடந்து வரும் போது மனங்களும் துள்ளும் என்று கூறலாம். எந்த விலங்குகளுக்கும் பயப்படாமல் மிக கம்பீரமான விலங்காக இது காட்டில் வாழ்ந்து வருகிறது.

இந்த யானை தான் உலகிலேயே மிகப்பெரிய நில வாழ் உயிரினம். குறிப்பாக ஆப்பிரிக்க சவன்னா யானைகள் மிகப் பெரிய யானைகளாக உள்ளது.

இந்த யானைகளில் ஆண் யானை மூன்று மீட்டர் வரை உயரமாகவும், 6000 கிலோகிராம் எடை கொண்டதாகவும் இருக்கும்.

Elephant
Elephant

சுமார் 60 முதல் 70 வயது வரை வாழக்கூடிய இந்த யானைகள் 35 முதல் 40 வயதில் தங்களது முழு வளர்ச்சியையும் அடையும். யானை குட்டி பிறக்கும் போதே 120 கிலோ எடையோடு இருக்கும் என்றால் அது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

யானைகளில் பொதுவாக மூன்று வகைகள் காணப்படுகிறது. அவை ஆப்பிரிக்க யானை, ஆப்பிரிக்க காட்டி யானை, ஆசிய யானை. இந்த யானைகளின் காதுகளை வைத்து அவற்றை வகைப்படுத்தி விடலாம்.

ஆசிய யானைகளை விட ஆப்பிரிக்க யானைகளின் காதுகள் பெரிய அளவில் கொண்டிருக்கும். மேலும் தும்பிக்கையை வைத்து யானையை அடையாளம் காணலாம். தும்பிக்கையின் நுனியில் இரண்டு விரல்கள் இருக்கும். அப்படி இருந்தால் அது ஆப்பிரிக்க யானை .ஒரே விரல் மட்டும் இருந்தால் அது ஆசிய யானை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

Elephant
Elephant

யானையின் தும்பிக்கையில் மட்டும் ஒரு லட்சத்தில் 50 ஆயிரம் தசை அலகுகள் உள்ளது. யானையின் முக்கிய உறுப்பாக தும்பிக்கை விளங்குகிறது. கிட்டத்தட்ட இந்த உறுப்பை பயன்படுத்தி 8 லிட்டர் அளவு தண்ணீரை ஒரே நேரத்தில் குடித்து விடும்.

யானைக்கு இரண்டு வயது ஆகும் போது தான் அதனுடைய தந்தம் வளர ஆரம்பிக்கும். அதன் இறுதி நாள் வரை தந்தம் வளர்ந்து கொண்டே இருக்கும்.

யானைகளுக்கு மிகவும் தடிமனான தோல் உள்ளது. இந்தத் தோல் சுமார் 2.5 சென்டிமீட்டர் வரை தடிமனாக இருக்கும். அது மட்டுமல்லாமல் யானையின் தோல் அதிக மதிப்புகளோடும், சுருக்கங்களோடும் இருக்கும். 

Elephant
Elephant

இந்த சுருக்கங்களின் முக்கிய பணி என்ன தெரியுமா? இந்த சுருக்கங்கள் மற்றும் மடிப்புகளில் பத்து மடங்கு அதிக அளவு தண்ணீரை சேர்த்து வைத்துக் கொள்வதால்  யானையின் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

கடுமையான வெயில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத்தான் யானையின் தோல்களில் அதிக அளவு சுருக்கங்கள் உள்ளது என்ற அறிவியல் உண்மை தற்போது உங்களுக்கு விளங்கி இருக்கும்.