• July 27, 2024

சேட் ஜிபிடி (Chat GPT)-யை தூக்கி சாப்பிடும் இந்தியாவின் ஸ்பெஷல் சேவை..

 சேட் ஜிபிடி (Chat GPT)-யை தூக்கி சாப்பிடும் இந்தியாவின் ஸ்பெஷல் சேவை..

google

கூகுள் நிறுவனத்தின் எதிர்காலத்திற்கு ஆப்பு வைத்து விட்டார்கள் என ஏஐ அறிமுகமான போது அனைவரும் பேசி வந்த கருத்துக்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும். இதனை அடுத்து கூகுள் திரும்பி வந்துட்டேன்னு.. சொல்லு என்ற வகையில் தனது பணிகளை வேகப்படுத்தி சாட் ஜி பி டி ஐ தூக்கி சாப்பிடக்கூடிய வகையில் தற்போது கூகுள் டெக்னாலஜி சந்தையை அதிர வைத்து விட்டது.

அந்த வகையில் இந்தியாவில் ஜெனரேட்டிவ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் சர்ச் (Search) சேவையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்தது. மேலும் கூகுள் நிறுவனத்தின் மொத்த வர்த்தகமும் இந்த சர்ச் சேவையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்படும் வேலையில் இதில் ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்த உள்ளது.

google
google

ஏஐ சேட் போர்ட் பிரிவில் கூகுள் ஏற்கனவே பிராட் சேவையை அறிமுகம் செய்த போதும் படிப்படியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகரித்து வருகிறது. அதற்காக ஒரு தனி தளத்தையும் உருவாக்கியுள்ளது. இதன் பெயர் சர்ச் ஜெனரேட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ் என்பதாகும். இதைத்தான் எஸ்ஜிஇ (SHE) என்று அழைக்கிறார்கள்.

AI SEARCH சேவையில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நீங்கள் தேட முடியும். தற்போது அறிமுகம் செய்யப்படும், இந்த சேவை விரைவில் முழுமையாக அறிமுகமாக உள்ளது. இந்த சேவையில் நீங்கள் தேடுவதற்கான கேள்விகளையும் பதில்களையும் குரல் வடிவில் பெற முடியும்.

google
google

தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சேவையில் விரைவில் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் போன்ற பிற மொழிகளும் சேர்க்கப்பட உள்ளது.

தற்போது சர்ச் ஜெனரேட் ஜெனரேட்டிவ் எக்ஸ்பீரியன்ஸ் சேவை விருப்பப்படுபவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக கூகுளின் இந்திய பிரிவின் சர்ச் பொது மேலாளர் புனீஸ் குமார் தெரிவித்திருக்கிறார்.

google
google

இதனை அடுத்து சாட் ஜி பி டி கி ஆட்டத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார் சுந்தர் பிச்சை என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். விரைவில் இதில் எது வெல்லும் மக்கள் மத்தியில் அதிக புழக்கத்திற்கு உள்ளாகும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.

உங்களுக்கும் இது பற்றிய புதிய தகவல்கள் ஏதேனும் தெரிந்திருந்தால் அவற்றை தயங்காமல் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.