• July 27, 2024

“புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா செய்த அட்டகாசம்..!” – உலக நாடுகள் கண்டனம்..

 “புதிய வரைபடத்தை வெளியிட்டு சீனா செய்த அட்டகாசம்..!” – உலக நாடுகள் கண்டனம்..

china

இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே ஒரு பனிப்போர் நிலவுகிறது என்றால் அனைவரும் அதை ஒப்புக்கொள்ள தான் செய்வார்கள். இந்த சூழ்நிலையில் நமது ஆண்டை நாடான சீனா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய தேசிய வரைபடத்தால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வரைபடத்தில் நம் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் ஒன்றாக இருக்கும் அருணாச்சலப் பிரதேசம் இடம் பெற்றுள்ளது இதை தெற்கு திபெத் என்று சீனா கூறி உள்ளது இந்தியாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

china
china

அதே சமயம் நேபாளம் இந்த பகுதியை தனக்கு உரியது என்று பகிரங்கமாக பேசி வரக்கூடிய வேளையில் லிம்பியாதுரா,காலாபாணி,லிபுலேக் போன்ற பகுதிகளை இந்தியாவிற்கு சொந்தமானதாக சீன வரைபடம் சித்தரித்துள்ளது.

இதற்கு நேபாளத்தை ச் சேர்ந்த ஆத்மா மேயர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு அவரது சீன சுற்றுப்பயணத்தையும் ரத்து செய்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நேபாளத்துக்கு சொந்தமான பகுதிகளை இந்தியாவின் பகுதிகளாக சீன வரைபடத்தில் குறிப்பிட்டிருப்பது நேபாளிகளின் உணர்வுகளுக்கு எதிரானது என கூறியிருக்கிறார்.

மேலும் சீனாவின் புதிய வரைபடத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ் மலேசியா வியட்நாம் தைவான் போன்ற நாடுகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

china
china

இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் அக்சாயின் சில பகுதிகள் இடம் பெற்று இருப்பது போல தைவான் மற்றும் சர்ச்சைக்குரிய தென்சீனக்கடல் பகுதியும் இதில் இருப்பது பலர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தென் சீன கடற் பகுதியை வியட்நாம் பிலிப்பைன்ஸ் மலேசியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்ற வேளையில் இது போன்ற புதிய வரைபடத்தை அவர்கள் வெளியிட்டு இருப்பதால் இந்த வரைபடத்தை நேராக வைத்து இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, நேபால் போன்ற நாடுகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளது.

china
china

அதுமட்டுமல்லாமல் சீனா நாடு தங்களை எப்போதும் கட்டுப்படுத்த முடியாது என்ற தங்களது நிலைப்பாடுகளை ஒருமித்த பொருளாக கொடுத்திருக்கக் கூடிய நாடுகள் அவர்கள் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து சீனா உண்மையான போக்கை கடைபிடிக்குமா இல்லை மேலும் மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு ஆசிய பிராந்தியத்தில் சிக்கல்களை ஏற்படுத்துமா என்பது இனி வரும் காலங்களில் தெரியவரும்.