• July 27, 2024

 “இம்பாசிபிள் என்பது முட்டாள்களின் அகராதியில் காணப்படக்கூடிய சொல்!” – உரக்கக்கூறிய நெப்போலியன் போனபார்டே..

  “இம்பாசிபிள் என்பது முட்டாள்களின் அகராதியில் காணப்படக்கூடிய சொல்!” – உரக்கக்கூறிய நெப்போலியன் போனபார்டே..

Napoleon Bonaparte

பிரான்ஸ் மன்னர் நெப்போலியன் பிரெஞ்சு புரட்சி நடந்த காலத்தில் பெரிதாக பேசப்பட்ட மிகச் சிறப்பான தலைவர்களில் ஒருவன் தான் இந்த நெப்போலியன். இவர் 1804 ஆம் ஆண்டு முதல் 1814 ஆம் ஆண்டு வரை பிரான்சின் பேரரசராக திகழ்ந்தார்.

இவர் ஆகஸ்ட் 15, 1769 மத்தியில் மத்திய தரை கடலில் உள்ள கோர்ஷிகா தீவில் பிறந்தார். வரலாற்றில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார் இதற்கு காரணம் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடந்த போர்.

Napoleon Bonaparte
Napoleon Bonaparte

நெப்போலியன் மனதில் தான் உயரம் குறைந்தவர் என்ற வருத்தம் இருந்துள்ளது. இவரது உயரம் ஐந்து அடி இரண்டு அங்குலம் தான். நெப்போலியன் தனது 15ஆவது வயதில் பிரெஞ்சின் முக்கிய படைகளில் ஒன்றான இகோல் மிலிடைர் பிரிவில் சேர்ந்து கொண்டார். இதனை அடுத்து தனது 16 வயது முடிய கூடிய சமயத்தில் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து அபார திறமை கொண்ட நெப்போலியன் 1792 ஆம் ஆண்டு ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வை பெற்றார். இதனை தொடர்ந்து 1796 இல் பாரீஸ் ஆட்சி புரிந்து வந்த புரட்சி படைத்து எதிரான கிளர்ச்சியை கட்டுப்படுத்தியதால் இவர் இத்தாலியில் இருக்கும் பிரண்ட்ஸ் என்று ராணுவத்திற்கு கமாண்டராக பதவி உயர்வு பெற்றார்.

இதனைத் தொடர்ந்து தனது அபாரமான ஆளுமையால் 1799 நவம்பரில் நெப்போலியன் முதல் கன்சுலானார். இதனை அடுத்து தன்னை ஒரு ராணுவ சர்வாதிகாரியாக மாற்றிக் கொண்ட இவர், ஐரோப்பிய சாம்ராஜ்யத்தை தனக்கு கீழ் நிறுவக்கூடிய வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

Napoleon Bonaparte
Napoleon Bonaparte

பல வகையான கல்வி சீர்திருத்தங்களை கொண்டு வந்த இவர் பேங்க் ஆப் பிரான்ஸ் என்ற வங்கியை பிரான்சில் நிறுவினார். மேலும் 1800 இல் மாரெங்கோவில் வைத்து ஆஸ்திரியர்களை வென்றார். இதனை அடுத்து ஐரோப்பிய கண்டத்தில் பிரான்சிங் ஆதிக்கத்தை நிலை நிறுத்திய இவர் 182 ஆம் ஆண்டு தன்னைத் தானே நிரந்தர கன் சுலாக நியமித்துக் கொண்டார்.

பல நிலப் பகுதிகளை கைப்பற்றிய இவர் பல வெற்றிகளை கண்டார். இவரின் உறவினர்கள் மற்றும் விசுவாசிகள் இத்தாலி, நேபிள், ஸ்பெயின்,  ஸ்வீடன் போன்ற பகுதிகளில் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள்.

இதனை அடுத்து 1810 ஆம் ஆண்டில் நெப்போலியனுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள். மிகப்பெரிய தோல்விகளை அந்த சமயத்தில் சந்தித்ததின் காரணத்தால் பிரஞ்சு நாட்டின் வளம் காலியானது என கூறலாம்.

Napoleon Bonaparte
Napoleon Bonaparte

இதனைத் தொடர்ந்து 1814 ஆம் ஆண்டு பிரான்சில் நெப்போலியன் ஆட்சி வீழ்ச்சி அடைந்ததால் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். மேலும் இவரது மனைவி மேரி மட்டும் மகன் இரண்டாம் நெப்போலியன் ஆஸ்திரியாவிற்கு சென்றார்கள். இதனை அடுத்து ஓராண்டு இடைவெளியில் 1815 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் நெப்போலியன் தீவில் இருந்து தப்பித்து பிரான்சை கைப்பற்றினார்.

இந்த சூழ்நிலையில்தான் பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா போன்ற நாடுகள் ஒன்று திரண்டு நெப்போலியன் மீது போர் தொடுத்தது. இது தான் வரலாற்றில் புகழ்பெற்ற வாட்டர் லூ யுத்தம் என்று கூறப்படுகிறது. நெப்போலியன் தோல்வியுற்று 100 நாட்களில் மீண்டும் தனது ஆட்சியை இழந்து புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

இதனை அடுத்து தனது 51 வது வயதில் நெப்போலியன் வயிற்று புற்றுநோயால் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவரது மரணம் குறித்த சர்ச்சைக்கு இன்று வரை விடை கிடைக்காமல் உள்ளது.