• October 12, 2024

“அனுன்னாகி (Anunnaki) சுமேரிய புராணங்களில் போற்றப்பட்ட கடவுள்..!” – வேற்று கிரகவாசியா?

 “அனுன்னாகி (Anunnaki) சுமேரிய புராணங்களில் போற்றப்பட்ட கடவுள்..!” – வேற்று கிரகவாசியா?

Anunnaki

நாகரீகங்களிலேயே மிகச்சிறந்த நாகரிகமாக கருதப்பட்டு வரக்கூடிய மெசபடோபியன் நாகரீக காலத்தில் மெசபடோமிய மக்களால் வழிபட்ட கடவுளாக இருக்கும் அனுன்னாகி (Anunnaki) அந்த நாகரிகத்தில் வளர்ந்தவர்கள் வணங்கிய கடவுளின் தலைவராக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

மெசபடோமிய மக்கள் கிரேக்க மக்களை போலவே பல கடவுள்கள் இருப்பதாக நம்பினார்கள். அந்த கடவுள்களில் வலிமையானவர்கள் உலகின் பல்வேறு பகுதிகளை ஆட்சி செய்து வருகிறார்கள் என்பதை உறுதியாக நம்பியதோடு வானத்தை ஆட்சி செய்ய ஒரு கடவுளையும், மேலும் சிறு ,சிறு பகுதிகளை ஆட்சி செய்ய பல நூறு சிறு தெய்வங்களையும் வணங்கினார்கள்.

Anunnaki
Anunnaki

புராணங்களின்படி அதீத சக்தி வாய்ந்த கடவுளாக ஆன் விளங்கிக்கிறார். இவரது மகனான என்லிலையும் இவர்கள் வணங்கி இருக்கிறார்கள். மேலும் இவர்கள் மர்டுக்,ஈயா,நின்ஷூர்சாக்,நபு,ஷமாஷ்,இஷ்தார் போன்ற தெய்வங்களை வணங்கி இருக்கிறார்கள்.

ஆன் வம்சத்தில் வெளிவந்த இந்த கடவுள்களை கூட்டாக அனுன்னாகி (Anunnaki) என்ற பெயரில் அழைத்து இருக்கிறார்கள். அது சரி இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்பதை இன்று வரை மர்மமாக உள்ளது.

ஆன்,என்லில்,மர்டுக் ஆகிய இந்த மூன்று தெய்வங்களும் அனுன்னாகி (Anunnaki) மிக சக்தி வாய்ந்த தெய்வங்களாக வழிபடப்பட்டு இருக்கிறார்கள்.

Anunnaki
Anunnaki

இந்த தெய்வமானது நிபிரு கிரகத்தில் இருந்து வந்தவர். மனித இனத்தைச் சார்ந்தவர் அல்ல என்று ஒரு சாரார் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் இந்த கடவுளுக்கு இறக்கைகள், கொம்பு போன்றவை இருந்தது.

மனித இனத்தை கட்டுப்படுத்தக் கூடிய அற்புத ஆற்றல் நிறைந்த சக்தியாக இந்த கடவுள் இருந்திருக்கிறார். எனவேதான் இவர்கள் வேற்று கிரகத்தில் இருந்து வந்த வேற்று கிரக வாசிகள் என்ற தகவல் அதிர்ச்சியில் வரவழைத்துள்ளது.

நிபிரு கிரகத்தைச் சேர்ந்த மனித இனம் கொண்ட வேற்று கிரகவாசிகள், தங்கத்தை எடுப்பதற்காக  பூமிக்கு வந்திருக்கிறார்கள் என்ற கருத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் மிகவும் கொடுமையான தன்மையை கொண்டவர்கள், அனுன்னாகி (Anunnaki) மனிதர்களை அடிமையாக்கி அவர்களை ஆள முயன்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.

Anunnaki
Anunnaki

மனிதர்களைப் போல தோற்றமளிக்காத இவை கண்டுபிடிக்க முடியாத நட்சத்திர மண்டலத்தில் இருந்து வந்த வேற்று கிரக வாசியாகத்தான் இருக்கும். இதற்கு உதாரணங்களை சுமேரிய புராண புத்தகங்களில் காணப்படுகிறது.

இதன் மூலம் கடவுளாக வணங்கப்பட்ட இவர்கள் உண்மையில் அறியப்படாத கிரகத்திலிருந்து தங்கத்தை எடுக்க வந்த வேற்று கிரக வாசிகளா என்ற சந்தேகம் இன்று வரை கண்டுபிடிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.