• July 27, 2024

“சீறிவரும் சிங்கம்.. காட்டு ராஜா..!” – பற்றிய சிறப்பு தகவல்கள்..!

 “சீறிவரும் சிங்கம்.. காட்டு ராஜா..!” – பற்றிய சிறப்பு தகவல்கள்..!

Lion

எத்தனை தான் விலங்குகள் இருந்தாலும் சிங்கம் என்றால் அனைவருக்குமே ஒரு ஈடுபாடு ஏற்படும். பார்ப்பதற்கு கன கம்பீரமான மிருகமான இதை காட்டு ராஜா என்று அனைவரும் அழைக்கிறார்கள்.

இந்த சிங்கத்தின் கர்ஜனையை யாரும் மறக்க முடியாது. அதனுடைய வலிமை திறமை கம்பீரம் இவற்றையெல்லாம் பார்க்கும் போது வாழ்ந்தால் சிங்கத்தை போல் வாழ வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள்.

அப்படிப்பட்ட இந்த சிங்கம் பற்றியும், சிங்கத்தின் சிறப்புகள் பற்றியும் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் நினைப்பது போல் சிங்கம் பூனை குடும்பத்தை சார்ந்தது தான். இந்தக் குடும்பத்தை ஃபெலிடே (Felidae) என்று அழைப்பார்கள்.

Lion
Lion

இந்த பூனை குடும்பத்தில் புலிக்கு அடுத்தபடியாக சிங்கம் வருகிறது. உலகிலேயே சிங்கங்களின் எண்ணிக்கையை பொருத்தவரை ஆசியா மற்றும் ஆப்பிரிக்க வகை சிங்க இனத்தில் தான் அதிக அளவு சிங்கங்கள் உள்ளது என கூறலாம்.

கூட்டுக் குடும்பமாகவே இவை குழுக்களாக வாழ்கின்றது. எனவே தான் இந்த குழுவினை பிரைட்ஸ் (Prides) என்ற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். இந்த ஒவ்வொரு ப்ரைஸ் குழுவிலும் சுமார் 10 முதல் 15 சிங்கங்கள் இருக்கலாம்.

இதில் ஆறு முதல் ஏழு சிங்கங்கள் பெண் சிங்கங்களாகவும், 10 முதல் 15 வரை ஆண் சிங்கங்களும், மீதி அவற்றின் குட்டிகளாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மேலும் பெண் சிங்கங்களுக்கு ஒரு ஆண் சிங்கத்தை பிடித்து விட்டால் அந்த பிரைட் குழுவில் சேர முடியும். அதைப்போலவே அந்த பெண் சிங்கத்திற்கு விருப்பமாக மூன்று முதல் நான்கு ஆண்டுகள் வரை சிங்கத்தோடு இணைந்து இருக்கக்கூடிய பட்சத்தில் இது தொடர்ந்து அந்த குழுவில் உறுப்பினராக தொடருமாம்.

Lion
Lion

சிங்கத்தின் கர்ஜனை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கக்கூடிய திறனோடு இருக்கும். அதாவது கிட்டத்தட்ட எட்டு கிலோமீட்டர் வரை சிங்கத்தின் கர்ஜனையை உங்களால் கேட்க முடியும்.

மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய இவை சீட்டாவைப் போல வேகம் இல்லாவிட்டாலும் ஒரு 50 மைல் பெர் செகண்ட் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய அசாத்திய திறன் கொண்டது.

மரபணு குறைபாடு காரணமாக சில சமயங்கள் இந்த சிங்கங்கள் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும். ஆனால் இந்த வகையான சிங்கங்கள் அதிக அளவு உள்ளதா? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். லூசிசம் என்ற மரபணு குறைபாடு இருக்கும் பட்சத்தில் அவை வெண்ணிறமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த சிங்கங்கள் சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வரை வாழக்கூடிய திறன் கொண்டவை சராசரியாக ஒவ்வொரு சிங்கமும் பத்து முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய தன்மை கொண்டிருக்கும்.

Lion
Lion

மேலும் இந்த சிங்கங்கள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு என்றால் அது வரிக்குதிரை, காட்டெருமை மற்றும் மற்ற விலங்குகளின் மாமிசத்தை தான் பொதுவாக ஆண் சிங்கங்கள் தினசரி 7 கிலோ கிராம் வரை இறைச்சிகளை உண்ணும். அதுவே பெண் சிங்கம் என்றால் 5 கிலோ கிராம் அளவு இறைச்சியை உண்ணக்கூடியது எனக் கூறலாம்.

வேட்டையிடுதலைப் பொறுத்தவரை சிங்கங்களில் பெண் சிங்கங்கள் தான் புத்திசாலித்தனமாகவும், தந்திரமாகவும் செயல்பட்டு வேட்டையாடி உணவினை ஆண் சிங்கங்களுக்கும் தரும்.

வியர்வை சுரப்பிகள் இல்லாத சிங்கங்கள் ஒரு நாளைக்கு 16 முதல் 20 மணி நேரம் வரை உறக்கத்தை மேற்கொள்ளும். வியர்வை அதிகம் வெளிவராத குளிர்ச்சியான இரவு நேரங்களில் மட்டுமே இவை வேட்டையாடும் தன்மை கொண்டது.

Lion
Lion

மனிதனின் பார்வை திறனை விட சுமார் ஆறு மடங்கு அதிகளவு கூர்மையான பார்வை திறனை கொண்ட சிங்கங்களில் ஆண் சிங்கத்தின் எடை 330 முதல் 550 பவுண்டுகளும், பெண் சிங்கங்கள் 25 முதல் 395 பவுண்டுகளும் இருக்கும். புதிதாக பிறக்கும் சிங்கத்தின் எடை மூன்று பவுண்டுகள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கங்களின் வயதை கண்டுபிடிக்க அதன் தோலின் நிறத்தை வைத்து நாம் வயதை கணித்து விடலாம். மேலும் சிங்கங்களின் குதிங்கால் எப்போதும் தரையை தொடாமல் இருக்கும். இதன் மூலம் சத்தம் இல்லாமல் வேட்டையாட இது உதவுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி, சுமார் 523 ஆசிய சிங்கங்களில் எண்ணிக்கையானது தற்போது 674 ஆக உயர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.