• July 27, 2024

வில்லியம் ஹார்விக்கு முன்பே..! – மாரடைப்பை பற்றி விளக்கிய மாதவ் கர்..

 வில்லியம் ஹார்விக்கு முன்பே..! – மாரடைப்பை பற்றி விளக்கிய மாதவ் கர்..

Madev kar

1628 ஆம் ஆண்டு வில்லியம் ஹார்வி தான் முதன்முறையாக இதயம் மற்றும் ரத்த ஓட்டம் பற்றி விளக்கி இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான உண்மையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள்.

அதுபோலவே 1733 மனிதருக்கு ஏற்படக்கூடிய ரத்த அழுத்தத்தை ஸ்டீபன் ஹேல்ஸ் கண்டறிந்தார். இதனை அடுத்து வில்லியம் ஹார்பர்டன் முதல் முறையாக1768 இல் ஆஞ்சினாவை பற்றி பல விளக்கங்களை தந்திருக்கிறார்.

ஏனெனில் இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் இவர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்பு அதுவும் ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்தை சேர்ந்த ஒரு கிராம மருத்துவர், மாதவ் கர் என்பவர் மாரடைப்பு பற்றிய முழு விவரங்களையும் மிகத் தெளிவாக எடுத்து கூறியிருக்கிறார்.

Madev kar
Madev kar

இதில் பழங்கால மருத்துவர் கூறியிருக்கின்ற அத்தனையும், இவர்கள் கண்டுபிடித்ததற்கு ஒப்பாகவே உள்ளது என்று கூறலாம். இந்த நோயை அவர்கள் விக்ஷேபிகா நோய் என்று அழைத்திருக்கிறார்கள்.

மேலும் இந்த இதய நோய் ஏற்படும் போது அவற்றிலால் ஏற்படக்கூடிய அறிகுறிகளை கீழ்காணும் முறையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அஸ்தீன அதிகோஷ்டம் – மாரடைப்பு ஏற்படும்போது கீழ் மத்திய பகுதியில் விலா எலும்பு இருக்கக்கூடிய பகுதியில் வலி ஏற்படுதல்.

வாம பாஹு, வாம பாஹா – உடலின் மேல் பகுதியில் இடது கை மற்றும் இடது பக்கத்தில் வலி ஏற்படுதல்.

Madev kar
Madev kar

அவஷ்யம் ப்ரஜாயேத பிடா –  கழுத்து மற்றும் பின்புறம் வரை வலது பக்கம் வலி ஏற்படுதல் மேலும் அதீத அசௌகரியத்தை உணருதல்.

உக்ர ப்ருஷம் ப்ராணா மர்ம பிரபிதினி – அழுத்துதல் போன்ற உணர்வு ஏற்படுத்துதல்.

மேலும் மாரடைப்புக்கு இன்னும் சில அறிகுறிகளை விரிவாக கூறியிருக்கிறார்கள். தூக்கி எறிவது போல் இருப்பது, வாந்தி எடுப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை சமகர்ஷா எனக் கூறியிருக்கிறார்.

உடலின் மேல் பகுதியில் முள் குத்துவது போன்ற உணர்வு, தலை சுற்றுதல் போன்றவை தோடா, பேடா என்ற வார்த்தைகளால் விவரித்து இருக்கிறார்.

மூச்சு விடுதலில் சிரமம் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுவதை சுவாச அவ ரோதா என்று அழைக்கிறார். நா வறட்சியை தாஹா என்றும் மயக்கம் வருவதை மோகா என்றும் விளக்கமாக கூறியிருக்கிறார்.

Madev kar
Madev kar

குழப்பமான திகில் போன்ற உணர்வை பிக்ஷனா எனவும், அதிகமாக திடீர் வியர்வை வருவதை ஸ்வேதா ராஷே ப்ரயம் நிர்கம என்றும் முகம் நிறமற்றமாக மாறுவதை வைவர்னியா என்ற வார்த்தைகளால் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் மார்பில் வீக்கம் ஏற்படுவது போல உள்ள உணர்வை ஆத்மனா, திரவ திரட்சியை அனாஹா, புலன் உறுப்புக்கள் செயலாகாமல் இருப்பதை அருச்சிஹ் இந்திரியாணம், மரணம்  இல்லாமல் இருக்கும் நிலையை பிரனாஷ் என்று மிகத் தெளிவாக விளக்கு இருப்பதை பார்க்கும்போது நமக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஆறாம் நூற்றாண்டிலேயே ஹார்ட் அட்டாக் என்று அழைக்கப்படும், மாரடைப்பு பற்றிய அறிவியல் பூர்வமான விஷயங்களை அக்குவேர், ஆணிவேராக விளக்கி இருப்பதை பார்க்கும்போது மெய் சிலிர்க்கிறது.

எனவே இனிமேலாவது இந்திய மொழிகளில் இருக்கின்ற பழமையான நூல்களை நாம் ஆய்வு செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடையலாம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.