• October 12, 2024

குளிரூட்டும் ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் !!!

 குளிரூட்டும் ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் !!!

ஐஸ்கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாகும். அந்த ஐஸ் கிரீமை வைத்தே ஒரு அருங்காட்சியகம் சிங்கப்பூரில் திறக்கப்பட்டுள்ளது.

Visit Singapore — Museum of Ice Cream

அமெரிக்காவின் “மியூசியம் ஆஃப் ஐஸ்க்ரீம்” தங்களது முதல் வெளிநாட்டு கிளையை சிங்கப்பூரில் கடந்த வியாழக்கிழமை திறந்துள்ளனர். இதுபோன்ற கொரோனா காலகட்டத்தில் இந்த ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் ஆனது மக்களின் மனதை குளிரச் செய்யும் ஒன்றாக சிங்கப்பூரில் அமைந்துள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும். குழந்தைகள் துள்ளி குதித்து விளையாடும்படியான விளையாட்டு உபகரணங்களும் இந்த அருங்காட்சியகத்தில் அமைந்துள்ளது. இந்த Pandemic சூழ்நிலையில் அனைவரும் முக கவசம் அணிந்து இந்த அருங்காட்சியகத்திற்கு வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Visit Singapore — Museum of Ice Cream

இது போன்ற Ice-cream அருங்காட்சியகங்களை மேலும் பல நாடுகளில் நிறுவ உள்ளதாக மியூசியம் ஆஃப் ஐஸ்கிரீம் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் நிறுவப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகமானது 60 ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இங்கு செல்ல கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் மிகவும் அவசியம். அது இருந்தால் மட்டுமே இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட முடியும்.

இதுபோன்ற ஐஸ்கிரீம் அருங்காட்சியகம் இந்தியாவிலும் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.