• October 5, 2024

இந்த தந்திரமான நாய் செய்த சுட்டித்தனத்தை பாருங்கள் !!

 இந்த தந்திரமான நாய் செய்த சுட்டித்தனத்தை பாருங்கள் !!

நாய்கள் மிகவும் விசுவாசமானது என கேள்விப்பட்டிருப்போம், ஆனால் நாய்கள் மிகவும் தந்திரமானது என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாக நாம் வளர்க்கும் நாய்களுக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்போம். தேவையான அளவுக்கு உணவளித்து விட்டு மீதி இருக்கும் உணவை பத்திரமாக நாய்க்கு எட்டாதவாறு வைப்போம். அப்படி வைத்திருந்த உணவை அழகாக தனது அறிவினால் தானே எடுத்து சாப்பிட்டு இருக்கிறது இந்த செல்ல பிராணி.

How old is your dog in human years? Scientists debunk 'multiply by 7' age  rule

ஒரு வீட்டின் அடுப்பறையில் உயரமான திட்டின் மேல் உணவு இருந்திருக்கிறது. இதைக் கண்ட அந்த வீட்டின் செல்ல நாய் எப்படியாவது அந்த உணவை யாருக்கும் தெரியாமல் எடுத்து சாப்பிட வேண்டும் என நினைத்துள்ளது.

Table-க்கு அடியில் இருக்கும் நாற்காலியை அழகாக தனது இரு கால்களை வைத்து நகர்த்தி, அடுப்பறையில் இருக்கும் திட்டிற்கு அருகில் கொண்டு சென்று, நாற்காலியின் மேல் ஏறி உணவை சாப்பிட்டுள்ளது இந்த நாய். இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Dog

இந்த வீடியோவை பார்த்துவிட்டு பலரும் அந்த நாயின் அறிவை பாராட்டி தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். விசுவாசத்தை தாண்டி தனது தந்திரத்தையும் இந்த நாய் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளது.

உணவைக் கேட்டு குறைக்கும் நாய்களுக்கு மத்தியில் தனக்குத் தேவையான உணவை தானே எடுத்து கொள்ளும் இந்த அறிவாளி நாய் பல பாராட்டுகளை வாங்கி குவிக்கிறது.

சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த அழகிய தந்திர நாயின் வீடியோவை கீழுள்ள Twitter பதிவில் காணுங்கள்.

இது போன்ற பதிவுகளுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.