• November 14, 2024

அறுந்த மின்விசிறி ! அலறிய குடும்பம் !

 அறுந்த மின்விசிறி ! அலறிய குடும்பம் !

சிறு வயதிலெல்லாம் இரவு தூங்கும் போது மின்விசிறி திடீரென ஓடிக்கொண்டிருக்கும் போதே கீழே விழுந்தால் என்னவாகும் என கற்பனையாக பலமுறை நினைத்திருப்போம். அந்த கற்பனை வியட்நாமில் உண்மையாக நடந்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.

வியட்நாமில் ஒரு குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்கள் அறையில் இருந்த மின்விசிறி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Ceiling Fan Falls Down On Family While They Were Having Dinner

அந்த குடும்பத்தின் நல்ல நேரமோ என்னவோ மின்விசிறி கீழே விழுந்தும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மின்விசிறி விழுந்த இடத்தில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த சிறுவன் மீது மின்விசிறி நேராக விழாமல் இரண்டு றெக்கைகளுக்கு நடுவில் அந்த சிறுவன் இருப்பதுபோல விழுந்திருந்தது.

இந்த சம்பவம் நிகழ்ந்தவுடன் அந்த சிறுவனுக்கு அருகில் இருக்கும் நபர் எழுந்து அந்த சிறுவனை தூக்கி பத்திரப்படுத்தினார். இந்த வீடியோ பார்ப்பவர்களை பதபதைக்க செய்துள்ளது.

நம் வீட்டில் உபயோகிக்கும் மின்னணு இயந்திரங்கள் முறையான பராமரிப்பில் இருக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது. எந்தவித பழுதாயினும் அதை சரி செய்து விட்ட பிறகே அந்த இயந்திரத்தை மறுபடியும் உபயோகிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வைரலான வீடியோவை கீழே காணுங்கள்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.