• September 21, 2024

Tags :kaamam

நீயே என் ஓளடதம்!!

எனக்கான உன் நினைவுகள்;வேதாளம் போல முதுகு மீதேறிஅமர்ந்து இறங்க மறுக்கின்றன…! நினைத்து புதைந்து போவதற்கானவரிகள்… எழுத்துக்கள்,லாவகமாக விரல் பிடித்துமார்பின் மீது தலை வைத்துசில்லென்ற ஸ்பரிசம் தொடுக்கின்றன…!! கண்ணீர் துளிகள்…பெருமூச்சுகள்,வாழாத வாழ்க்கையின் தேடல்கள்;யாருமற்ற தனிமையின் உணர்வுகள்;எல்லாவற்றிலும் எனதாகிப்போனவனேதூரத்தில் நின்று ஏன்வேடிக்கை பார்க்கிறாய்…?! என் பொழுதுகளைஆக்கிரமித்துக் கொள்ளும்,மறந்திருந்த…மறைந்திருந்தஉணர்வின் நினைவுகளைதட்டி எழுப்பும்… நீநீயே என் ஓளடதம்!!!Read More