• July 27, 2024

“இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர்..!”- நியூஸ் செக்கர் வெளியிட்ட கருத்து..!

 “இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர்..!”-  நியூஸ் செக்கர் வெளியிட்ட கருத்து..!

400 years once blossom flower

இமயமலை பலவிதமான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் இருக்கக்கூடிய பகுதியாக திகழ்கிறது. மேலும் மனிதர்களுக்கு தெரியாத சில மர்மமான தெய்வீக தாவரங்கள் இங்கு அதிக அளவு உள்ளதாக நம்பப்படுகிறது.

 

அந்த வகையில் எண்ணற்ற அதிசயங்கள் புதைந்திருக்கும் இமயமலையில் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மகா மேரு மலர் என்ற பூக்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக அளவு பரவி வருவதோடு, இந்த மலரை பார்த்த உடனேயே ஷேர் செய்யுங்கள் இதன் மூலம் நன்மை கிடைக்கும் என்ற கருத்து பரவலாக பரவி வருகிறது.

400 years once blossom flower
400 years once blossom flower

இதனை அடுத்து தமிழ் நியூஸ் செக்கர் இந்த மலர் பற்றிய உண்மை நிலையை அறிய களம் இறங்கினார்கள். இதனை அடுத்து அவர்கள் தெரிவித்து இருக்கக் கூடிய கருத்துக்களின் மூலம் 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கின்ற பூ என்ற கருத்து பொய்யென்று தற்போது தெரிய வந்துள்ளது.

 

மேலும் சீனாவில் உள்ள The Alpine Garden Society என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2011 ஆம் ஆண்டு இந்த மகா மேரு மலரின் படம் வெளியிடப்பட்டது. 

 

இமயமலைப் பகுதியில்  400 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் பூ  இது இல்லை. இதன் பெயரும் மகாமேரு அல்ல என்பது தற்போது உறுதியாகியது.

400 years once blossom flower
400 years once blossom flower

இமயமலையில் இந்த பூ  சுமார் இரண்டு மீட்டர் அளவு வளரக்கூடிய தன்மை கொண்டது. இதனை சிக்கிம் ரூஹுபார்ப் (அ) நோபெல் ரூஹுபார்ப் என்ற அறிவியல் பெயர் உள்ளது. மேலும் இந்த பூவை பற்றி ப்ளவர்ஸ் ஆஃப் இந்தியா என்கிற இணையப்பக்கத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது. அதில் இந்த மலர் எந்த வகையைச் சார்ந்தது என்றும் ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பூக்கக்கூடியது மலர் என்ற கருத்து தெரியவந்துள்ளது.

 

இமயமலையில் மட்டுமல்லாமல் இந்த செடியானது மிக உயரமாக இருக்கக்கூடிய மலைப்பகுதிகளில் வளரக்கூடிய தன்மை கொண்டது. குறிப்பாக நேபாளம், சிக்கிம், பூட்டான், திபெத் ஆகிய மலைத்தொடர்களில் 4000 மீட்டர் உயரத்தில் வளரக்கூடிய தாவரம் ஆகும்.

400 years once blossom flower
400 years once blossom flower

மகாமேரு என்று அழைக்கப்படும் அமலபர்ணி மலர் இது. புகைப்படங்களில் மட்டுமே காண முடியும் என்ற செய்திகள் தவறானது என்பது தற்போது ஊர்ஜிதம் ஆகிவிட்டது.

 

எனவே நியூஸ் செக்கர் தமிழ் மேற்கொண்ட உண்மை அறிதல் சோதனையில் மகாமேரு எனும் மலர் பற்றிய தகவல் தவறானது என்பது தற்போது பலருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.