• October 3, 2024

 மங்கோலிய படைகளுக்கு தண்ணீர் காட்டிய அலாவுதீன் கில்ஜி..! – வரலாறு சொல்லும் உண்மை..

  மங்கோலிய படைகளுக்கு தண்ணீர் காட்டிய அலாவுதீன் கில்ஜி..! – வரலாறு சொல்லும் உண்மை..

Alauddin Khilji and mongol war

மங்கோலியப் படைகளை எதிர்த்து தோற்கடித்த இந்திய வீரராக டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியாளரான அலாவுதீன் கில்ஜியை கூறலாம். இந்தப் போரின் போது சுமார் 20,000 மங்கோலியர்கள் கொல்லப்பட்டார்கள்.

1305 ஆம் ஆண்டு அலாவுதீன் படைகள் மங்கோலியர்கள் படைகளை தாக்கியது. அதுமட்டுமல்லாமல் அலாவுதீன் தனது தளபதி மாலிக் கபூரை ஒரு பெரும் படையோடு மங்கோலியர்களை தோற்கடிக்க அனுப்பி வைத்தார். அந்தப் படையில் பணியாற்றிய வீரர்களுக்கு ஒரு வருட சம்பளத்தை இலவசமாக கொடுப்பதாக அறிவித்தார்.

Alauddin Khilji and mongol war
Alauddin Khilji and mongol war

மேலும் இந்த போரில் மங்கோலிய ஒற்றர்களை துக்ளத்தின் பிரிவு கண்டறிந்து தொக்ளக் மாலிக் கபூருக்கு, மங்கோலிய இராணுவம் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவலை தந்ததை அடுத்து டெல்லி ராணுவம் யுத்த களத்திற்கு சென்றது.

இரவி ஆற்றங்கரையில் நடைபெற்ற இந்த மாபெரும் யுத்தத்தை பற்றி அமீர் குஷ்ரா குறிப்பிட்டு இருக்கிறார். இரண்டு ராணுவமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிரும் ஆக நின்று யுத்த தாக்குதலை தொடர்ந்து நடத்தியது.

இந்த தாக்குதலில் கொபெக் தனது தாக்குதலை துவங்கினார். இதனை அடுத்து மாலிக்கபூரின் வீரர்கள் ஆரம்ப நிலையில் சிதறிச் சென்றார்கள். எனினும் அவர்களது வீரர்களை ஒன்று படுத்திய மாலிக் கபூர் மங்கோலியர் ராணுவத்தை சூறையாடியதோடு, மங்கோலிய இராணுவ தலைவரையும் சிறைப்பிடித்தார்.

Alauddin Khilji and mongol war
Alauddin Khilji and mongol war

இதனை அடுத்து மங்கோலிய படைகளில் இருந்த மற்ற பிரிவுகள் தைவு தலைமையிலான பிற மங்கோலிய பிரிவுகளில் இணைந்தது. எனினும் மாலிக்கபூர் மற்றும் அவரது தலைமையில் இருந்த ராணுவத்தின் தாக்குதல்களைப் பற்றி கேள்விப்பட்ட மற்ற மங்கோலிய படையைச் சார்ந்தவர்கள் சிந்து ஆற்றை கடந்து தப்பி ஓடினார்கள்.

வரலாற்று ஆதாரங்களின்படி கொபெக்கின் படையெடுப்பு தான் அலாவுதீன் ஆற்றின் போது நடத்தப்பட்ட கடைசி மங்கோலிய படை எடுப்பாக இருக்கும் என்று அனைத்து வரலாற்று ஆய்வாளர்களும் உறுதியாக நம்புகிறார்கள்.

துவா பான் 1306 மற்றும் 1307 இறந்தார். இவரது இறப்புக்கு பின் சில வருடங்களுக்கு இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடிய அளவு யாரும் அத்தனை வலிமை வாய்ந்தவர்களாக இல்லை.

Alauddin Khilji and mongol war
Alauddin Khilji and mongol war

அதுமட்டுமல்லாமல் அலாவுதீனின் காலத்தின் போது மங்கோலியர்கள் இந்தியா மீது இரண்டு முறை படை எடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் வரலாற்று ஆய்வாளர்களின் மத்தியில் உள்ளது.

இந்தியாவில் வாழ வேண்டும் என்று எண்ணத்தில் படை எடுத்து வந்த மங்கோலிய வீரர்கள் இறுதியில் கைதிகளாகி டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். மேலும் மங்கோலியர்களின் மண்டை ஓடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு கோபுரத்தை அலாவுதீன் கட்ட ஆணையிட்டதாகவும் தெரிகிறது.