கட்டுக்கதை அல்ல.. உண்மையே ராமாயணம் – நிரூபிக்கும் ஆதாரங்கள்..!
இரண்டு வகையான இதிகாசங்கள் இந்தியாவில் உள்ளது. அதில் குறிப்பாக ராமாயணம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ராமாயணத்தை சிலர் புரளி என்றும் கட்டுக்கதை என்றும் கூறி வருகின்ற வேளையில், இந்த ராமாயணம் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
இதை அடுத்து ராமர் காவியமான இராமாயணம் உண்மையில் நடந்திருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய ஆதாரங்களைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ராமன், ராவணனை அழித்த பிறகு இலங்கையிலிருந்து அயோத்தி திரும்பி செல்ல 21 நாட்கள் ஆனதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இலங்கையில் இருந்து அயோத்திக்கு 21 நாள் நடந்தே போயிட்டாங்களா? என்ற கேள்வி பலர் முன் எழும் போதும், அது உண்மையே என்று தற்போது கூகுள் மேப் நிரூபித்துள்ளது. நீங்களும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இலங்கையில் இருந்து அயோத்தியா செல்ல எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை உங்கள் கூகுள் மேப்பில் போட்டு பாருங்கள். உண்மை உங்களுக்கு எளிதில் விளங்கும்.
இது போலவே ராமாயணத்தில் ராவணனின் கோட்டையை பாதுகாக்க நான்கு தந்தங்கள் உள்ள யானைகள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.இது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான்கு தந்தங்களோடு யானைகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதால் நீங்கள் அதை கோம்போதெரஸ் என்று இணையத்தில் தேடிப் பார்த்தால் அது பற்றிய தகவல்கள் கிடைக்கும்.
அது மட்டுமல்லாமல் இராமாயண போர் நடந்த சமயத்தில் லக்ஷ்மணன் மயங்கி விழ இமயமலையிலிருந்து ஹனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்து லக்ஷ்மணனுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டார்கள். மீண்டும் அந்த மலையை இமயமலைக்கே திருப்பிக் கொண்டு போய் வைத்து விட்டதாக ராமாயணம் சொல்கிறது. இந்த நிலையில் இமயமலையில் இருக்கின்ற சில மூலிகைச் செடிகள் இன்னும் இலங்கையின் பல பகுதிகளில் வளர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இலங்கைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே இருக்கக்கூடிய ராமர் சேதுபாலத்தை நீங்கள் சேட்டிலைட் வழியாக காணும் போது அது இன்னும் நீருக்கடியில் உள்ளதாக அறிவியல் வல்லுனர்கள் கூறி இருப்பது ராமாயணம் உண்மையில் நடந்திருக்கக் கூடிய கதை தான் என்பதை நமக்கு உணர்த்துகிறது அல்லவா.
இலங்கைக்கு நெருப்பினை வைத்து அனுமன் திரும்பிச் சென்று விடுகிறார் அல்லவா. இன்றும் இலங்கையில் மொசகுடா என்ற பகுதியில் தீயிட்டு கொளுத்துவதற்கான சான்றுகள் அங்கு அதிக அளவு காணப்படுகிறது. அந்தப் பகுதியில் தான் ராவணன் தனது புஷ்பக விமானத்தை நிறுத்தி இருந்ததாக சொல்லப்படுகிறது.
1 Comment
ஆம் ராமன் வனவாசம்க்கு நடந்து வரும்போது நந்தம்பாக்கம் காட்டில் தங்கி சென்றதாகவும், ராமர் தங்கியதால் அந்த காட்டை இக்காடு தங்களுடைது என்று கொடுத்தாக சொல்லப்படுகிறது. அவ்வாறு ராமனுக்கு சொந்தமான காடே இக்காடு தங்களுடைது பிற்காலத்தில் ஈக்காட்டுத்தாங்கள் என்று இன்று வரை வழக்கத்தில் உள்ளது. நன்றி
Comments are closed.