• October 7, 2024

 “மைக்கேல் டிக்சன் தூக்கத்தில் நிகழ்த்திய கின்னஸ் ரெக்கார்ட்..! – சாதனைத் சிறுவன்..

  “மைக்கேல் டிக்சன் தூக்கத்தில் நிகழ்த்திய கின்னஸ் ரெக்கார்ட்..! – சாதனைத் சிறுவன்..

Michael Dixon

இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு சில வியாதிகள் இருப்பது இயல்பான விஷயம் தான். அந்த வகையில் மைக்கேல் டிக்சன் என்பவருக்கு தூக்கத்தில் நடக்கக்கூடிய வியாதி இருந்துள்ளது. இந்த வியாதியை அவர் ஒரு கின்னஸ் ரெக்கார்டாக மாற்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

இந்தச் சம்பவமானது சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து உள்ளது. அப்போது மைக்கேலுக்கு சுமார் 11 வயது தான் இருக்கும். அமெரிக்காவின் இண்டியானா பகுதியில் உள்ள  ரயில் தளத்தில் அதிகாலை சுமார் 2.45 மணி அளவில் தனியாக ஒரு சிறுவன் இருப்பதை ரயில்வே அதிகாரி பார்த்திருக்கிறார். இந்த நிகழ்வானது ஏப்ரல் ஆறாம் தேதி 1987 இல் நடந்தது.

Michael Dixon
Michael Dixon

இதனை அடுத்து அந்த அதிகாரி போலீசாருக்கு விவரத்தை தெரிவித்து விட்டார்.எனவே உரிய நேரத்தில் போலீஸ் சாரும் அங்கு வந்து சேர்ந்து சிறுவனை விசாரித்த போது அவரது பெயர் மைக்கேல் டிக்சன் என்றும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இந்த சிறுவனின் பெற்றோர்களுக்கு தகவல்கள் தெரிவிக்க பட்டது. இச்சூழ்நிலையில் அந்த சிறுவன் அங்கு எப்படி வந்து சேர்ந்தான் என்ற ரீதியில் புலன் ஆய்வை போலீசார் மேற்கொண்டார்கள்.

அப்போது தான் அவன் இரவு நேரத்தில் நைட் டிரசை போட்டுக் கொண்டு அவன் வீட்டில் அருகில் இருந்த ரயிலில் ஏறி இண்டியானாவை அடைந்திருக்கிறார் என்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பயணத்தின் போது சிறுவனின் கால்களில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

Michael Dixon
Michael Dixon

மேலும் இந்த சிறுவனுக்கு இரவு நேரத்தில் தூக்கத்தில் நடக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிய வந்ததோடு, அதனால் தான் இரவு உறங்கும் போது தன்னை அறியாமல் கிட்டத்தட்ட 160 கிலோமீட்டர் வரை ரயிலில் பயணம் செய்து வந்திருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அது மட்டுமல்லாமல் இந்த சம்பவத்தை உலக கின்னஸ் ரெக்கார்ட் அங்கீகாரம் கொடுத்ததின் காரணத்தால் இந்த தூக்கத்தின் போது ஏற்பட்ட 160 கிலோமீட்டர் பயணம் கின்னஸ் ரெக்கார்டாக இன்றும் பேசப்படுகிறது.

Michael Dixon
Michael Dixon

எவ்வளவோ பேர் கின்னஸ் ரெக்கார்டு படைக்க வேண்டும் என்று பிரம்மபிரயத்தனம் செய்து வரக்கூடிய வேளையில் தனக்கு இருந்த நோயை வைத்தே, ஒரு கின்னஸ் சாதனை படைத்த இந்த சிறுவனின் செயல் பலர் மத்தியிலும் பேசும் பொருளாக இருந்தது.

அது மட்டுமல்லாமல் தனக்கு இருந்த எதிர்மறை செயலை நேர்மறையாக மாற்றி கின்னஸில் சாதனை படைத்துவிட்டார் மைக்கேல் டிக்சன். எனவே எந்த சூழ்நிலையிலும் நீங்கள் துவண்டு விடாமல் உங்களுக்குள் இருக்கக்கூடிய எதிர்மறை செயலை நேர்மறையாக்க முயற்சி செய்யுங்கள்.