• October 13, 2024

தங்கமகன் பெயரில் விளையாட்டு அரங்கம் !!!

 தங்கமகன் பெயரில் விளையாட்டு அரங்கம் !!!

சமீபத்தில் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கே பெருமை தேடித் தந்தவர் நீரஜ் சோப்ரா. நீரஜ் சோப்ராவை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில், பூனாவில் அமைந்துள்ள ராணுவ விளையாட்டு அரங்கத்திற்கு அவரின் பெயரை சூட்டி கௌரவித்து உள்ளனர்.

Neeraj Chopra: Boy with the golden arm | Olympics News,The Indian Express

ஏற்கனவே நீரஜ் சோப்ராவுக்கு பல சலுகைகளும் பரிசுத்தொகையும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது பெயரை வருங்கால தலைமுறையினர் மறக்காமல் இருப்பதற்கு இந்த அரங்கத்திற்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர். புனே ராணுவ அரங்கத்தின் பெயர் சூட்டும் விழா இன்று நடைபெற்றது.

நம் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த விழாவானது நடைபெற்றது. இந்த விழாவில் ராணுவ ஜெனரல் நார்வானே பங்கேற்றுள்ளார்.

Neeraj Chopra Brings Home Gold From Tokyo: All You Need to Know

கடின உழைப்பால் கிடைத்த வெற்றிக்கு எந்த அளவிற்கு அங்கீகாரம் இருக்கும் என்பதற்கு நீரஜ் சோப்ராவின் வெற்றி ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நீரஜ் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றதை டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-ன் சிறந்த 10 மாயாஜால நிகழ்வுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீரஜ் சோப்ரா அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை Deep Talks தமிழ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற தகவல்களுக்கு Deep Talks தமிழுடன் இணைந்திருங்கள்.