இரண்டு வருடங்களில் பிறந்த இரட்டையர்கள் ! 2021-ல் அண்ணன், 2022-ல் தம்பி !
அமெரிக்காவின் ஒரு தாய் 2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். முதல் குழந்தை டிசம்பர் 31, 2021 அன்று இரவு 11:45 மணிக்கு பிறந்தது, இரண்டாவது குழந்தை 15 நிமிடங்களுக்கு பிறகு ஜனவரி 1 2022 அன்று பிறந்தது.
இச்சம்பவம் கேட்பவரை வியப்பில் ஆழ்த்துகிறது. Nativdad மருத்துவ மையத்தின் முகநூலில் இந்த செய்தி பகிரப்பட்டுள்ளது. 15 நிமிட இடைவெளியில் பிறந்த அய்லின் மற்றும் Alfrado எனும் இரட்டையர்கள் இரண்டு வெவ்வேறு ஆண்டுகளில் இந்த உலகிற்கு வந்துள்ளனர்.
இவர்களுள் ஜனவரி 1ஆம் தேதி நள்ளிரவில் பிறந்த அய்லின், Nativdad மருத்துவமனையில் 2022ஆம் ஆண்டு பிறந்த முதல் குழந்தை ஆனார். அவரது இரட்டை சகோதரர் Alfrado 2021 ஆம் ஆண்டில் அந்த மருத்துவமனையில் பிறந்த கடைசி குழந்தை ஆனார்.
பொதுவாக இரட்டை குழந்தைகள் என்றால் ஒரே நாளில் பிறந்திருப்பார்கள் என்பதைத்தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இரண்டு ஆண்டுகளில் 15 நிமிட இடைவெளியில் இரண்டு குழந்தைகள் பிறந்து இருக்கிறார்கள் என்ற செய்தி நம்மை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது.
இந்த இரட்டையர்களை ஏற்கனவே 3 மூத்த உடன்பிறப்புகள் உள்ளனர். இரண்டு அக்காக்கள் மற்றும் ஒரு அண்ணன் உள்ளனர். இரட்டையர்களாக இருந்தாலும் அய்லினும் Alfrod-உம் இரண்டு வெவ்வேறு நாட்களில் தங்களது பிறந்தநாளை கொண்டாடுவர். இது ஒரு விசித்திரமான நிகழ்வாகும்.
இந்த இரட்டை குழந்தைகளுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் அனா அப்ரில், தனது வாழ்நாளில் இது ஒரு மறக்க முடியாத பிரசவம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வருடத்தின் புத்தாண்டை இதைவிட சிறப்பாகவும் வியப்பாகவும் வரவேற்க முடியாது என கூறியுள்ளார். “இந்த பிரசவத்தை பார்த்ததற்கு பின் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”, எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- வாழ்க்கையின் முக்கிய பாடங்கள்: “ரத்தன் டாடாவின்” பொன்மொழிகள்
- உலகளாவிய டாடா: ரத்தன் டாடாவின் தலைமையில் இந்திய நிறுவனம் சர்வதேச அரங்கில் எப்படி ஜொலித்தது?
- சென்னை உயர்நீதிமன்றம் ஆண்டுதோறும் ஒரு நாள் முழுவதும் மூடப்படுவது ஏன்? அதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான காரணம் என்ன?
- “மற்றவர் துன்பம் பார்த்தால் நம் துன்பம் மறையுமா? ஷாவின் வியக்கவைக்கும் கதை!”
- காகத்திற்கு உணவு வைக்கும் பழக்கம்: நம் முன்னோர்களின் அறிவாற்றலை வெளிப்படுத்துகிறதா?
Nativdad மருத்துவ மையத்தால் பகிரப்பட்ட இந்த அதிசய இரட்டையர்களின் புகைப்படம் அடங்கிய ஃபேஸ்புக் பதிவை கீழே காணுங்கள்.
இது போன்ற தகவல்களுக்கு தீப் டாக்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.