“தமிழர்களின் ஆரோக்கியம் காத்த நாட்டு சர்க்கரை..!” – அசத்தல் நன்மைகள்.
வெள்ளை சர்க்கரையில் அதிகளவு கலோரிகள் காணப்படுவதால் எளிதில் நீரிழிவு நோயாளிகள் உருவாக கூடும் என்று சர்க்கரையை அதிகளவு சாப்பிட பயப்படக்கூடிய நபர்கள் என்றும் இருக்கிறார்கள்.
மேலும் இன்று சந்தைப்படுத்தப்படுகின்ற அஸ்பார்ட்டம் என்று அழைக்கப்படுகின்ற சர்க்கரை உடல் நலத்துக்கு மிகவும் ஊறு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
ஆனால் நாம் முன்பு பயன்படுத்திய நாட்டுச்சர்க்கரை நம் உடல் நலத்துக்கு தீமை செய்யாத ஒன்று என்பதால் இந்த சர்க்கரையின் பயன்பாட்டை உங்கள் வீடுகளில் நீங்கள் கொண்டு வரும் போது உங்கள் ஆரோக்கியம் பன்மடங்காக உயரும்.
நாட்டு சர்க்கரை என்பது கரும்பு சாறிலிருந்து வெல்லப்பாகு எடுத்து தயாரிக்கப்படும் சர்க்கரை தான். இதுவே வெள்ளை சர்க்கரைக்கு நிறைய வேதிப்பொருட்களை போட்டுத்தான் அந்த வெண்மை நிறத்துக்கு கொண்டு வருவார்கள்.
எனவே இயற்கையான நிறத்தோடு காணப்படும் நாட்டுச்சர்க்கரை சிறந்த மணத்தோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் அதிகளவு விட்டமின்கள், தாது பொருட்களை கொண்டது.
நாட்டு சர்க்கரையை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது இதில் இருக்கும் வைட்டமின் பி 6, நியாசின் மற்றும் பாந்தோதெனிக் அமிலம் சருமங்களை பளபளப்பாக்கி உங்களை புத்துணர்வோடு வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நாட்டு சர்க்கரை ஒரு மிகச்சிறந்த மாற்று பொருள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை உணவில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் நாட்டுச்சர்க்கரை நீங்கள் சேர்த்துக் கொள்வதின் மூலம் உங்களது பசியை கட்டுப்படுத்தி வைக்கும். மேலும் பசி எடுக்காத திறனை இது கொடுக்கக்கூடிய சக்தி படைத்ததால் விரைவில் உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தசை பிடிப்பை போக்கக்கூடிய சக்தி கொண்டது. அது மட்டுமல்லாமல் இந்த நாட்டு சர்க்கரையில் பொட்டாசியம் அதிக அளவு காணப்படுவதால் வயிற்று வலியை குறைக்கவும், தசை பிடிப்புகளை நீக்கவும் உதவி செய்கிறது.
எனவே நமது பழம் தமிழர்கள் பயன்படுத்திய நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தி வெள்ளை சர்க்கரைக்கு நீங்கள் விடை கொடுப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
இளம் வயதிலேயே ஏற்படுகின்ற நீரழிவு நோய் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் இதன் பயன்பாடு இருக்கும்.
இனி காபி, டீ போன்ற பானங்களை பருகும் போது கூட நீங்கள் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தாமல் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்திப்பாருங்கள். மாற்றம் எப்படி ஏற்படுகிறது என்பதை சில நாட்களுக்குள் நீங்கள் கட்டாயம் உணர்வீர்கள்.