அட.. விநாயகர் சிலை அதுவும் எரிமலை உச்சியிளா?..
எந்த இடத்திலும் வேறுபாடு இல்லாமல் அமர்ந்து காட்சி அளிக்கும் கடவுள்களில் மிகச்சிறந்த கடவுளாக, அதுவும் முதன் முதற்கடவுளாக விநாயகப் பெருமான் இருக்கிறார்.
அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் எரிமலை உச்சியில் அமர்ந்திருந்து காட்சி அளிக்கிறார், என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படி எரிமலையின் உச்சியில் இருந்து காட்சி அளிக்கும் விநாயகர் எங்கு இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுள் அலை போல அலை பாய்கிறதா?
இந்தப் பிள்ளையார் இந்தோனேசியாவில் தான் இருக்கிறார். எரிமலைகளுக்கு பஞ்சம் இல்லாத இந்தோனேசியாவில் சுமார் 141 எரிமலைகள் உள்ள நிலையில் இதில் 131 எரிமலைகள் இன்னும் உயிரோடு உள்ளது.
உலக அளவில் இந்து சமயம் பல்வேறு நாடுகளில் பறந்து விரிந்து இருந்தது என்பதற்கு இந்த பிள்ளையாரை உதாரணமாக கூறலாம். இந்த விநாயகர் இந்தோனேசியாவில் இருக்கும் குனுங் ப்ரோமோ என்ற பகுதியில் எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறார்.
சுமார் 700 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகின்ற இந்த விநாயகரை அங்கிருக்க கூடிய மக்கள் வழிபட்டு வருவதோடு எரிமலை வெடிப்புகளில் இருந்து அவர்களை காப்பதாகவும் நம்பி வருகிறார்கள்.
எரிமலையின் மீது அமர்ந்திருக்கும் இந்த விநாயகர் இருக்கும் இடத்தில் வசிக்கும் மக்களை டெனெகர் என்று அழைக்கிறார்கள். மேலும் இந்த விநாயகரின் பெயர் விக்நஹர்தா என்பதாகும். அனுதினமும் இந்த விநாயகர் பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் மூதாதையர்கள் தான் இந்த விநாயகரை எரிமலையின் உச்சியில் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்திருக்கிறார்கள். எரிமலை வெடித்தாலும் இந்த பகுதியில் இருக்கும் மக்கள் இவரை வழிபடுவதை நிறுத்தவில்லை.
15 நாட்கள் கொண்டாடப்படும் யட்னய கசடா திருவிழாவானது மிகவும் பிரபலமானது. ப்ரோமோ மலையை புனித தளமாக இந்தோனேசியாவில் இருப்பவர்கள் கருதுகிறார்கள்.
உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடிய பட்சத்தில் ஒருமுறை எந்த விநாயகரை சென்று நீங்கள் தரிசிக்கலாம். எரிமலையில் இருக்கும் இந்த விநாயகரை அன்போடு துதித்து வரும் மக்கள் மற்றும் அவரை பாதுகாக்க கூடிய விநாயகராக இவர திகழ்கிறார் என்பதை கேட்கும்போதே நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா?
வினைகளை தீர்க்கக்கூடிய வல்லமை படைத்த இந்த விக்ன விநாயகன் எரிமலைகளால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களில் இருந்து இந்தோனேசிய மக்களையும் பாதுகாப்பார் என்பதில் அனைவரும் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.