• December 3, 2024

 யார் இந்த கந்தர்வர்கள்? இவர்களுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு உள்ளதா..

  யார் இந்த கந்தர்வர்கள்? இவர்களுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு உள்ளதா..

Gandharva

கந்தர்வர்கள் பற்றிய குறிப்புகள் ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் வேதங்களில் முழுமையாக காணப்படுகிறது. இவர்களுக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது.

வேத காலத்தில் சோம ரசத்திற்கு பாதுகாவலர்களாக இருந்தவர்கள் தான் இந்த கந்தர்வர்கள். இவர்கள் உயரமான மலைப் பகுதிகளில் வசிக்கக் கூடியவர்கள். சோமரச உற்பத்திக்கு பெயர் பெற்றவர்கள்.

Gandharva
Gandharva

சிந்து சமவெளி நாகரிகத்தில் கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய முத்திரைகளில் பிராணிகளுக்கு கீழே ஒரு மர்ம சின்னம் உள்ளது. இதுவரை இது என்ன என்று உறுதியாக எவராலும் கூற முடியவில்லை. அது போலவே ஒற்றை கொம்பு மிருகத்திற்கும் விடை கொடுக்கவில்லை. சிலர் இதை குதிரை என்று கூறுகிறார்கள்.

வேறு சிலரோ சோம ரசத்தை வடிகட்டக்கூடிய பாத்திரமாக இது இருக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள். இந்த வகை முத்திரைகள் எல்லாம் கந்தர்வர்களுடையது என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவதோடு, அந்த மர்ம பாத்திரம் சோம பானத்தை வடிகட்ட பயன்படுத்துக்கூடிய முத்திரையாக இருக்கலாம் என்பதை தெரிவித்து இருக்கிறார்கள்.

Gandharva
Gandharva

மேலும் வேதத்தில் கந்தர்வர்கள்  27 பேர் இருக்கிறார்கள் என்றும் யஜூர் வேதமானது 6333 பேர் என கூறுகிறது. ரோகினி நட்சத்திரத்திற்கும் இவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், தமிழர்கள் மற்றும் வடக்கே இருந்தவர்கள் பழங்காலத்தில் ரோகினி நட்சத்திரத்தில் தான் திருமணத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தியை அகநானூறில் காணலாம்.

மேலும் இந்த கந்தர்வர்கள்  துரியோதனன், நாகர்கள் உடன் சண்டை போட்டுள்ளதாக இதிகாசங்கள் கூறுகிறது. சோமக் கொடியை பயிர் செய்வதில் வல்லவர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள். எனவே சிந்து சமவெளி மக்களோடு இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.

Gandharva
Gandharva

அது மட்டுமல்லாமல் வராஹமிகிரர் எழுதிய ப்ருஹத் சம்ஹிதையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

 இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் கந்தர்வர்கள் யார் என்றும், அவர்களுக்கும் சிந்து சமவெளி மக்களுக்கும் இடையே என்ன தொடர்பு இருந்தது என்றும் இது போன்ற வேறு விஷயங்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால் எங்களோடு நீங்கள் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்.