• July 27, 2024

 இந்தப் பழக்கங்கள் இருக்கிறதா? – அப்ப நீங்க ஆற்றல் வாய்ந்த மனிதர்..

  இந்தப் பழக்கங்கள் இருக்கிறதா? – அப்ப நீங்க ஆற்றல் வாய்ந்த மனிதர்..

Effective people

மனிதர்களுக்கு நேர்மறை ஆற்றலை விதைத்து வெற்றியினை பெறுவதற்காக எண்ணற்ற நூல்கள் உள்ளது. அதை படிப்பதின் மூலம் அவர்களுக்குள் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி சாதனைகளை படைக்கக்கூடிய வியப்புமிக்க மனிதர்களாக மாற அவை உதவி செய்கிறது. 

அந்த வகையில் விற்பனையில் சாதனை படைத்த புகழ்பெற்ற தன்னம்பிக்கை நூலாக “THE SEVEN HABITS OF HIGHLY EFFECTIVE PEOPLE” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டீபன் ஒரு மனிதனிடம் காணப்படக்கூடிய ஏழு பழக்க வழக்கத்தின் மூலம் அவன் ஆற்றல் மிக்க மனிதனாக மாறிவிடுவான் என்ற கருத்தை மிக ஆழமான முறையில் அழுத்தமாக தெரிவித்திருக்கிறார்.

Effective people
Effective people

இந்த புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் கருத்தினை படிப்பதின் மூலம் ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் ஆற்றல்மிக்க மனிதனாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் அந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் நிச்சயம் சாதனை மனிதர்களின் பட்டியலில் இடம் பிடிப்பார்கள்.

அதற்காக எத்தகைய பழக்க வழக்கங்களை ஒவ்வொரு மனிதனும் பழக்கப்படுத்த வேண்டும் என இந்த புத்தகம் தெரிவிக்கிறது, என்பதைப் பற்றி விரிவாக எந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக செயல்திறன் மிக்க மனிதர்களாக மாற நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் என்னால் முடியும், என்னால் இதை கட்டாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் வளர்த்துக் கொள்வது அவசியம். 

என்னால் முடியாது, இதை என்னால் கட்டாயம் செய்ய முடியாது என்ற எதிர்வினையை விடுத்து, நேர் மறை குணத்தைக் கொண்டவர்களால் எதையும் சாதிக்க முடியும். எனவே நேர்மறையாக எண்ண கூடிய பழக்கத்தை மேற்கொள்வது மிகவும் சிறப்பானது.

Effective people
Effective people

இரண்டாவதாக நமது லட்சியத்தின் முடிவான வெற்றியை மனதில் நிலை நிறுத்தி களம் இறங்கி, நாம் செயல்படும்போது எத்தகைய இடர்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்து எறிந்து வெற்றியை மட்டுமே மனதில் கொண்டு இலக்கை நோக்கி செயல்பட ஆரம்பிக்க வேண்டும்.

மூன்றாவதாக எதையும் உடனே செய்து முடித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நீங்கள் செய்யும் வேலைகளில் குறைகளை வைக்காமல் நிறைவாக செய்ய, சிறிது நேரம் எடுத்தாலும் நீங்கள் கவனக் குறைவு இல்லாமல் உங்கள் பணியை மேற்கொள்வது அவசியமானதாகும்.

நான்காவதாக எதிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும், கட்டாயம் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கோட்பாட்டை உறுதியாக கடைப்பிடிப்பதின் மூலம் உங்களால் வெற்றியை நிச்சயமாக பெற முடியும்.

ஐந்தாவதாக நம்மை பிறர் புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதை விட திறனின் உணர்வுகளை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு, அதற்கு தக்கவாறு நடப்பதின் மூலம் உங்களது வெற்றி இலக்கை நோக்கி நீங்கள் விரைவில் செல்வீர்கள்.

Effective people
Effective people

மேலும் ஒருவர் பேசுவதை முழுமையாக பேசாமல் அவசரமாக நீங்களே பேசி முடிவுக்கு வருவதை தவிர்த்து, அவர்கள் பேசுவதை முழுமையாக கேட்டு பின் பேச முயற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

திறந்த மனதோடு குழுவாக வேலை செய்யும்போது பழைய பிரச்சனைகளுக்கு கூட தீர்வுகள் கிடைக்கும். எனவே உங்கள் மனதில் குழு மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

கடைசியாக உங்கள் மனதை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உடல், மனம், ஆன்மீகம், சமூக உணர்வு சமமாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய இந்த பழக்கங்கள் உங்களை ஆற்றல்மிக்க மனிதர்களாக மாற்றி விடும் என ஸ்டீபன் கூறி இருக்கிறார்.