• June 6, 2023

செல்வராகவனின் பொன்மொழிகள்!

 செல்வராகவனின் பொன்மொழிகள்!

இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தம் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிடும் அனுபவம் வாய்ந்த பொன்மொழிகள்!

கனவுகளை மட்டும் ஒரு போதும் கைவிடாதீர்கள்!
எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நின்று பறப்போம்!


இப்படித்தான் முன்னேறுவேன் என்று அடம் பிடிக்கக் கூடாது!
எவ்வளவு சிறிய சந்தர்ப்பமாக இருந்தாலும் பிடித்துக் கொண்டு முயற்சித்துக் கொண்டே இருங்கள்!
“காற்றில் கனிகள் விழுகிற வரைக்கும் காத்திருக்காதே .. கல்லடி கிடைக்கும்!

செய்யும் வேலையில் மிகப் பெரும் பெருமை கொள்ளுங்கள்! ஏற்றமோ தாழ்வோ ஒரு நேரத்திலும் பெருமிதத்தை கைவிடாதீர்கள்! முன்னேற்றம் தானாக வந்து சேரும்!

சமீபத்தில் கேட்டது! “உங்களை வீட்டில் மனைவி எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் வெளியுலகம் நடத்தும் “” உண்மையாக இருக்குமோ?

கடந்த காலத்தை நினைத்து பெருமைப் பட்டுக் கொண்டே வாழக் கூடாது! அது மட்டும்தான் வாழ்க்கை என்றாகி விடும் !

Deepan

http://www.deeptalks.in

Script writer, Video Editor & Tamil Content Creator