• July 27, 2024

“இரண்டு முறை காணாமல் போகும் சிவன் கோயில்..!- அப்படி என்ன நடக்கிறது..

 “இரண்டு முறை காணாமல் போகும் சிவன் கோயில்..!- அப்படி என்ன நடக்கிறது..

siva temple

இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு பழமையான அதிசய கோவில் பற்றியும் அங்கு நடக்கும் வினோதமான நிகழ்வை பற்றியும் தான், இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கப் போகிறோம்.

அட.. அப்படி என்ன அந்த கோயிலில் மர்மமான முறையில் நடக்கும் அதிசயம் என்ன என்று நீங்கள் யோசிக்கலாம். உண்மையில் அந்த சிவன் கோயில் ஒரு நாளைக்கு இரண்டு முறை காணாமல் போய்விடுமாம். இது எப்படி சாத்தியம் உண்மையா? என்று நீங்கள் உள்ளுக்குள் யூகிக்கலாம்.

siva temple
siva temple

உண்மையிலேயே அந்த அதிசய கோயில் ஸ்தம்பேஸ்வர் மகாதேவ் என்ற கோயிலாகும். இந்த கோயிலானது குஜராத்தில் அமைந்துள்ளது. லாஸ்ட் டெம்பிள் என்று அழைக்கப்படக்கூடிய இந்தக் கோயில் பெரும்பான்மையான மக்களை ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

தாரகாசுரன் என்ற அசுரனை ஒழித்த பிறகு முருகப்பெருமான் தலைமையிலான பல தெய்வங்கள் இந்த மகாதேவ் லிங்கத்தை நிறுவியதாக குறிப்புகள் காணப்படுகிறது. மேலும் இந்த அசுரன் மிகவும் மோசமானவன், எனினும் சிவபெருமானின் மீது ஆழ்ந்த பக்தியோடு இருந்ததாக பல புராணங்களும் கூறுகிறது.

சிவபெருமானை மகிழ்விக்க கடுமையான தவத்தை செய்ததின் விளைவாக மனம் இறங்கி சிவபெருமான் அசுரனுக்கு வரம் கொடுக்க முன் வந்தார். இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்ட அசுரன் தனக்கு சாகா வரம் வேண்டும் என்ற வரத்தை கேட்டான்.

siva temple
siva temple

உலகில் தோன்றும் எந்த உயிருக்கும் மரணம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதால், சிவபெருமான் அருள் அசுரனிடம் வேறு ஏதேனும் வரத்தைக் கேள் என்று கேட்க புத்திசாலித்தனமாக சிவபெருமானிடம் ஆறு வயது சிவனின் மகனை தவிர்த்து வேறு யாரும் என்னை கொல்லக்கூடாது என்ற அற்புத வரத்தை பெற்றான்.

இதனை அடுத்து தன்னை கொல்ல யாரும் இல்லை என்ற எண்ணத்தில் பல பாவங்களில் ஈடுபட்ட தாரகாசுரனை கொல்வதற்காக தனது நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமானை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகிறது.

தாரகாசுரனனை அழித்த பிறகு இந்தக் கோயில் பல தெய்வங்களால் நிர்மாணிக்கப்பட்டது. அப்படி இருக்கும் போது எப்படி இது மறைந்து போகிறது என்ற கேள்விக்கு உரிய விடையை பார்ப்போம்.

siva temple
siva temple

கடற்கரை ஓரத்தில் சில மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த கோயில் அதிக அலைகள் வரும்போது நீரில் மூழ்கி போகும்.பின் குறைந்த அலைகள் ஏற்படும் போது வெளியே தெரியும். பகலில் இரண்டு முறை கடல் மட்டம் உயர்வதால் தண்ணீரில் மறைந்து போகும். இந்த கோயில் மீண்டும் வெளிப்படும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்தக் கோவிலின் கருவறை முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டிருக்கும். கோவிலின் கட்டுமானத்தை பொறுத்தவரை மேற்பகுதி மட்டுமே தண்ணீருக்கு மேல் தெரியும்படி அமைந்துள்ளது.

இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும். இந்த கோயில் எப்படி இரண்டு முறை ஒரு நாளில் மறைகிறது என்று. இது போன்ற வித்தியாசமான கருத்துக்கள் உங்களுக்குத் தெரிந்தால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.