உண்மையில் ஆரியர்கள் யார்? அறிவியல் சொல்லும் உண்மை என்ன..

Aryan
ஆரியர் என்ற சொல்லானது சமஸ்கிருதம் மற்றும் ஈரானிய மொழியின் அடிப்படையில் அமைந்த “ஆர்ய” என்ற சொல்லில் இருந்து வந்து மருவி ஆரியர் என்று மாறி இருக்கலாம். இந்தச் சொல்லானது முதன் முதலில் ரிக் வேதத்தில் காணப்படுகிறது.
நாசிகளின் இனவாதத்தின் காரணத்தால் இரண்டாம் உலகப்போரை அடுத்து இந்த சொல் ஒரு வெறுப்பு மிக்க சொல்லாக மாறியது. எனினும் இந்த சொல் பற்றி பலவிதமான கருத்துக்கள் என்று உலகில் நிலவி வருகிறது.
இந்த ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரிக வீழ்ச்சிக்கு பின்பு கைபர் கணவாய் வழியாக கால்நடை மேய்க்க இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள்.

ஆர்யா என்ற சொல்லானது ரிக் வேதத்தில் 36 முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள் மேலும் தமிழ் இலக்கியமான அகநானூறில் ஆரியர்கள் அலறும்படி அவர்களை தாக்கி இமயத்தின் மீது வளைவான வில்லினை பொறித்த செய்தியை பகர்ந்திருக்கிறார்கள். எனவே வடக்கு பகுதியை ஆண்டவர்கள் ஆரியர்கள் என கூறலாம் அந்தப் பாடல் வரிகள்
“ஆரியர் அலற தாக்கி பேர் இசை
தொன்று முதிர் வட_வரை வணங்கு வில் பொறித்து
வெம் சின வேந்தரை பிணித்தோன்
வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே”
மேலும் இந்த ஆரியர்கள் வட மேற்கு இந்திய துணைக்கண்டத்திற்கு கிமு 1500க்கு பிறகு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து கால்நடைகளை ஓட்டிக்கொண்டு மெசபடோமியா வந்து அங்கிருந்து ஐரோப்பியா விற்கும் இந்திய துணை கண்டத்திலும் பரவி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இவர்கள் குதிரை பூட்டிய ரதங்களை பயன்படுத்தக்கூடிய பக்குவம் தெரிந்ததால் அடிக்கடி இடம் விட்டு இடம் நகர்ந்த இவர்களை குறித்த சான்றுகள் குறைவாகவே காணப்படுகிறது.
எனினும் இந்த ஆரியர்கள் தொடர்ச்சியாக கிழக்கு நோக்கி நகர்ந்து சென்றதற்கான ஆதாரம் கி.மு 1600 ஈராக்கில் கிடைத்த காசைட் கல்வெட்டு மற்றும் கி.மு 1800 காலத்தில் கிடைத்த மித்தானி கல்வெட்டுகளில் குறிப்புகள் உள்ளது.
இவர்கள் இந்திய துணை திட்டத்திற்குள் வந்து சுமார் 500 ஆண்டுகளுக்கு பிறகு தான் ரிக் வேதம் தொகுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இந்தியாவில் பூர்வீக மக்களாக இருந்த கஸ் யூக்களை அழித்தது பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதாக வரலாற்று ஆசிரியர் ஆர் எஸ் ஷர்மா தனது ஆய்வில் தெரிவித்திருக்கிறார்.

இன்னும் சில வரலாற்று ஆய்வாளர்கள் ஆயிரம் என்பது ஒரு மரபு அல்ல ஒரு மொழியை குறிக்கக்கூடிய சொல்லாக இருக்கலாம் என்று பல்வேறு வகைகளில் தங்களது கருத்துக்களை கூறியுள்ள நிலையே அறிவியல் படி ஆராய்ந்து பார்க்கையில் டி எம் ஏ போன்ற மரபியல் ஆய்வுகளில் ஆண்களுக்கு உரிய Y குரோமோசோமின் பங்கு அதிக அளவு காணப்படுவதால் இந்த இனத்தைச் சேர்ந்த ஆண்களே அதிக அளவு இடம் பெயர்ந்து இந்தியாவுக்குள் வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.