• December 4, 2024

 “யார் இந்த கொல்லிப்பாவை..!” – தமிழ் தெய்வத்தை சமணர்கள் வணங்கினார்களா?..

  “யார் இந்த கொல்லிப்பாவை..!” – தமிழ் தெய்வத்தை சமணர்கள் வணங்கினார்களா?..

kolli pavai

இன்று வரை தீய சக்திகளை சாம்பலாக்க கூடிய அதீத சக்தி படைத்த தெய்வமாக கொல்லிப்பாவை திகழ்கிறார். கொல்லி மலையை வசிப்பிடமாகக் கொண்டு இருக்கும் இந்தக் கொல்லிப்பாவை எட்டு கை உடைய காளி தெய்வமாக இன்று வரை மக்களால் போற்றப்பட்டு வரும் தெய்வங்களில் ஒன்று.

கொல்லிப் பாவையின் திருக்கோயில் ஆனது அடர்ந்த காடுகளின் நடுவே மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான மூலிகைகள் காணப்படுவதாகவும், அவற்றை சுவாசிப்பதின் மூலமே பலவிதமான நோய்களும் குணமாகும் என்பது இன்று வரை அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

kolli pavai
kolli pavai

தமிழ் கடவுளான இந்தக் கொல்லி பாவை சமணர்களின் ஆதிக்கத்தின் போது இந்த சிலை இருக்கும் பகுதியில் மகாவீரர் சிலையும் கொல்லி பகுதியில் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

இதற்குக் காரணம் கொல்லி மலையானது சமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதன் அடையாளமாக தான் மரத்தடியில் சமணரின் திரு உருவம் உள்ளது என கூறுகிறார்கள். இந்த இடத்தில் மேற்கு பகுதி நோக்கி சென்றால் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் சமணர்கள் நிறுவிய ஆலயத்தையும் நீங்கள் பார்க்க முடியும். ஆனால் இந்தப் பாதை மிகவும் ஆபத்தானது.

மிகவும் சிக்கலான இந்தப் பாதையில் பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது என்பதால் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டும் அங்கு இருக்கும் மலைவாழ் மக்களின் துணையோடு அந்தப் பகுதிக்குள் சென்று மகாவீரர் சிலையை தரிசித்து பின் கொல்லிப்பாவை இருக்கும் இடத்தை நோக்கி செல்வார்கள்.

kolli pavai
kolli pavai

இந்தக் கொல்லிப்பாவை கோயிலில் எழுந்தருளியிருக்கும் எட்டுக்கை காளியம்மன் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவிலாகவும் திகழ்கிறது.

இந்த கோவில் வெறும் தென்னை கீற்றுக்களால் வேயப்பட்ட குடிசையாக தான் இருக்கும். கதவுகள் இல்லாத நிலையில் வடக்கு நோக்கி அருள் புரியும் கொல்லிப்பாவை எப்போதும் சந்தன காப்பில் தான் காட்சியளிப்பான்.

எனவே இந்தக் கொல்லிப்பாவையின் எட்டு கைகளை எளிதில் பார்ப்பது மிகவும் சிரமம். மூலிகைச் சாற்றால் கொல்லி பாவைக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிஷேகத்தையும் யாரும் பார்க்க முடியாது  கோவில் பூசாரி சந்தன காப்பிட்டு அலங்காரம் செய்த பின்பு தான் நீங்கள் கொல்லி பாவையை தரிசிக்க முடியும்.

kolli pavai
kolli pavai

ஏற்கனவே கொல்லிமலை பகுதியில் சித்தர்களும், முனிவர்களும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இங்கு கிடைக்கும் தேனும், பழங்களையும் அவர்கள் உண்டு குகைகளில் தங்கி இருக்கிறார்கள்.

கொல்லிப் பாவை மிகவும் அழகிய பெண்ணாக இருப்பதோடு அனைவரையும் மயக்கக்கூடிய சக்தி கொண்டவளாக இருக்கிறாள. அசுரர்களை வதைக்க கூடிய வகையில் விஸ்வகர்மாவால் செதுக்கப்பட்ட இந்தக் கொல்லி பாவை அசுரர்களின் வாசம் பட்டவுடன் சிரிக்கும் திறன் கொண்டதாகவும், அவர்கள் உள்ளத்தை ஈர்க்கும் விதத்தை உடையதாகவும் இருக்கும்.

கொல்லிப்பாவையின் சிரிப்பிலும், கண் சிமிட்டுலிலும் மயங்கி அவள் அருகே யார் சென்றாலும் பஸ்மம் ஆகி விடுவார்கள் என்று இன்றுவரை நம்பப்படுகிறது. மேலும் இந்தக் சிலைகள் காடுகள் முழுவதும் ஆங்காங்கே இருந்ததாக கூறப்படுகிறது. அசுரர்களின் தொல்லை நீங்கிய பிறகு அந்தச் சிலைகள் அகற்றப்பட்டதாக தெரிகிறது.

kolli pavai
kolli pavai

கொல்லிமலைக்கு வரும் சித்தர்களும், மருத்துவர்களும் முதலில் கொல்லி பாவை இடம் அனுமதி பெற்ற பின்பு தான் மூலிகைகளை பறிப்பார்கள். அதன்பின் பறித்த மூலிகைகளை சன்னதியில் வைத்து பூஜித்து செல்வது வழக்கமாக இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

உங்களுக்கும் கொல்லிப்பாவையை பற்றி விசேஷமான செய்திகள் தெரிந்திருந்தால் அவற்றை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.