• September 10, 2024

உறக்கத்தில் இருந்து மீளாத சந்திரயான் 3..! – இஸ்ரோ சொன்னது என்ன?

 உறக்கத்தில் இருந்து மீளாத சந்திரயான் 3..! – இஸ்ரோ சொன்னது என்ன?

chandrayaan-3

நிலவில் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ஆம் தேதி 2.35 மணி அளவில் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் இந்தியாவின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் உலக நாடுகளால் திரும்பிப் பார்க்கப்பட்ட இந்த திட்டமானது மாபெரும் வெற்றியை கொடுத்து இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3, 40 நாட்கள் பயணத்தை மேற்கொண்டதோடு நிலவின் தென்பகுதியில் தரை இறக்கப்பட்ட உலக அளவில் மிகப்பெரிய சாதனையை செய்தது. இதன் மூலம் நிலவு பற்றி ஆய்வு செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு முக்கிய இடம் கிடைத்ததோடு, முதல் முறையாக தென் துருவத்தை அடைந்த பெருமையையும் பெற்றது.

chandrayaan-3
chandrayaan-3

நிலவின் தென் துருவத்தை அடைந்து விட்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்து நிலவை துல்லியமாக ஆய்வு செய்தது.

இந்த பிரக்யான் ரோவர் வெளிவந்த அந்த நாள் நிலவில் 14 நாட்களுக்கு அதாவது நிலவில் 14 நாட்கள் என்பது பூமியின் கணக்குப்படி ஒரு நாள் என உள்ளது. இந்நிலையில் இரவு முடிந்து பகல் ஆரம்பித்த நாள் ரோவர் அற்புதமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு பல விதமான தகவல்களை அனுப்பியது.

அதில் ரோவரில் உள்ள லிப்ஸ் எனப்படும் ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவியானது நிலவில் கந்தகம் இருப்பதை உறுதி செய்தது. மேலும் நிலவில் அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு, சிலிகான் போன்ற கனிமங்கள் இருப்பதை உறுதி செய்து பல்வேறு கோணங்களில் படங்களை எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

chandrayaan-3
chandrayaan-3

இந்த சூழ்நிலையில் தான் நிலவில் இரவு ஏற்பட்டது. இருள் சூழ்ந்த நிலையில் தென்துருவத்தில் களப்பணி ஆற்றிய ரோவர் மற்றும் லேண்ட் உறக்க நிலைக்கு செல்ல ஆரம்பித்தது. இதனால் மேற்கொண்டு எந்த தகவல்களையும் அனுப்ப முடியவில்லை.

இந்த நிலை தொடர்ந்து இருந்ததால் லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது இந்த நிலையில் நிலவில் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாலீ ரோவரில் இருந்த பேக்டரிகளில் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி என்ற பெயர் சூட்டப்பட்ட புள்ளியில் சூரிய ஒளி படும்போது கட்டாயம் ரோவர் உறக்க நிலையில் விடுத்து அதில் இருக்கும் கருவிகள் செயல்பட்டு மேலும் சில தகவல்கள் நமக்கு கிடைக்கலாம் என்று எதிர்பார்த்த சூழ்நிலையில் தற்போது இஸ்ரோ அறிவித்திருக்கும் செய்தி பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது.

chandrayaan-3
chandrayaan-3

சூரிய ஒளியின் மூலம் மீண்டும் தனது வேலையை துவங்க கூடிய சூழல் உருவாகலாம் என்ற நம்பிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில், நேற்று சூரிய உதயம் ஆரம்பிக்கும் போது உறக்க நிலையில் இருந்த லேண்டரையும், ரோவரையும் மீண்டும் எழ வைக்கக்கூடிய முயற்சிகள் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டார்கள்.

எனினும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர்களில் இருந்து எந்த விதமான சிக்னலையும் பெற முடியவில்லை. எனினும் இந்த முயற்சியை தொடர்ந்து செய்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்திருக்கிறார்கள்.