• October 6, 2024

இன்றைய “பல நாடுகளின்” சங்ககால பெயர்கள் என்னென்ன தெரியுமா?

 இன்றைய “பல நாடுகளின்” சங்ககால பெயர்கள் என்னென்ன தெரியுமா?

மனிதர்கள் மட்டும்தானா மாறி வருகிறார்கள்? பல நாடுகளின் பெயர்கள், எல்லைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. வரலாற்றில் பல நாடுகளின் பலப்பெயர்களைப் படிக்கிறோம். ஆனால் அவைகளின் இன்றைய பெயர் முற்றிலும் மாறிவிட்டது.

தொடக்கத்தில் ஐரோப்பியர்கள் அதிகம் அறிந்து கொள்ளாததால் “இருண்ட கண்டம்” என்று அறியப்பட்ட ஆப்பிரிக்கா, பிறகு தொடர்ந்த காலங்களில் பல்வேறு விதங்களில் புரிந்து கொள்ளப்பட்டது. அப்படித்தானே இன்னமும் “களப்பிரர் காலம்” வரலாற்றில் “இருண்டக் காலம்” என்றுத்தானே கூறப்படுகிறது.

வரலாறு என்றுமே வலியவராலும், வல்லவராலுமே வரையப்படுகிறது. அதுவே இன்னமும் தொடர்கிறது. முன்பு சொன்னால் அதுவே உண்மை என எண்ணப்படுகிறது.

வரலாற்றின் தந்தை என்று ஐரோப்பியர்களால் சொல்லிக்கொள்ளப்படும் கிரேக்கஹெரோடோடஸ் (Herodotus கி. மு. 484-425) என்பவரின் புரிதல் படி முழு ஆப்பிரிக்காவும் அப்போது ‘லிபியா’ என அழைக்கப்பட்டது. பின் கொஞ்சம் விவரமாகி ஆப்பிரிக்காவின் தென் பகுதியிலும் மக்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து கேள்விப்பட்டு அப்பகுதியை ‘எத்தியோப்பியா’ என்று அழைத்தனர். அப்பகுதி கடலையும் எத்தியோப்பியக் கடல் என அழைத்தனர். செமிட்டிய பினீசியர்களின் (Semitic Phoenicians) தொடர்புக்குப்பின் ‘ஆப்பிரிக்கா’ என அழைக்க ஆரம்பித்தனர்.

இத்தாலிய ரோமர்கள் வடக்கு ஆப்பிரிக்காவை (துனிசியா) வெற்றி கொண்ட பின், அப்பகுதியில் இருந்த அப்ரி (Afri) இன மக்களின் பெயர் கொண்டு முழு பகுதியையும் அவ்வாறே அழைத்தனர். எரிதிரைக்கடல் என அழைக்கப்பட்ட இந்தியப்பெருங்கடல் தாண்டிச் சென்று அடைந்த நிலப்பரப்பு என்ற அடிப்படையில் ஆப்பிரிக்கா என்றானது.

தமிழர்கள் பாலினேசிய, இந்தியப் பெருங்கடல் தீவு மற்றும் நாடுகளிலிருந்து பல இடங்களில் குடியேறியவர்கள் என்ற அடிப்படையில் கடலோடிகளாக இருந்தனர். கலை வளர்த்தனர், கட்டடங்கள் எழுப்பினர். தங்கம் கண்டுபிடித்தனர். எரிதிரைக்கடல் என அழைக்கப்பட்ட இந்தியப்பெருங்கடல் தாண்டிச் சென்று அடைந்த நிலப்பரப்பு என்ற அடிப்படையில் அது ஆப்பிரிக்கா என்றானது.

தமிழர்கள் சென்ற இடங்களில் எல்லாம் தங்கம் கண்டுபிடித்தனர். அதுவே அவர்களின் வாடிக்கையும் ஆனது. அதனாலேயே தமிழ்நாட்டில் தங்கச் சுரங்கம் இல்லாமலேயே இத்தனைத் தங்கம் குவிக்கப்பட்டிருக்கிறது எனலாம். இந்தியப்பெருங்கடல் தாண்டி ஆப்பிரிக்க பெரு நிலப்பரப்பில் நுழைந்தவர்கள் அங்கும் தங்கம் கண்டறிந்தனர். அவ்வாறு இந்தப்பெருங்கடலில் பயணம் செய்து களைத்த சமயத்தில் முதலில் தென்பட்ட தீவில் தங்கி ஓய்வெடுத்தனர். அத்தீவுக்கு அதனால் ‘சுகதரை’ என்றே பெயரிட்டனர். இன்றும் அத்தீவு ‘சுகத்ரா’ (Succotra) என்றே அழைக்கப்படுகிறது.

தென்கிழக்காசியாவில் சுவர்ண பூமி தங்க பூமி தான். கி.மு. 200ல் சுமத்திராவை “இந்திரகிரி” என்றும் கி.பி. 6ம் நூற்றாண்டில் “புலாவு பேர்ச்சா”, “ஸ்வர்ண தீபம்” என்று அழைத்தார்கள்.
சுவர்ண தீவம் – சுவர்ண தீவு. சுவர்ணம் என்றால் சு – வர்ணம். சோதிய வர்ணம் (சோதியான சூரியனின் வர்ணமான தங்க நிறம்.) ஆக “சுவர்ண தீவு” என்றால் தங்க தீவு, தங்கம் அதிகம் கிடைக்கப்பெறும் தீவு என்றே பொருள். தமிழில் அபரஞ்சி என்றால் தங்கம் என்று பொருள். நம்மூரிலும் அபரஞ்சிதம் என்று பெயர்கள் உண்டு. தங்கப்பெண். அபரஞ்சி நாடு ஆப்பிரிக்கா நாடு.
சொல்லப்போனால் செய்திகள் நீளும்,வரலாறு மாறும். நேரம் வரும்போது உண்மைகள் தானே வெளிவரும்.

இப்போது வழங்கும் நாடுகளின் பெயர்களையும், அவைகளின் பண்டைய பெயர்களையும் கீழேக் காணலாம்.

  • டச்சு கயானா — சுரினாம்
  • அபிசீனியா —எத்தியோப்பியா
  • கோல்டு கோஸ்ட் — கானா
  • பசுட்டோலாந்து — லெசதொ
  • தென்மேற்கு ஆப்பிரிக்கா — நமீபியா
  • வட ரொடீஷியா — ஜாம்பியா
  • தென்ரொடீஷியா — ஜிம்பாப்வே
  • டாங்கனீகாம,சன்ஸிபார் — தான்சானியா
  • கோட்டே டிஐவோயர் — ஐவரி கோஸ்ட்
  • சாயிர் — காங்கோ
  • சோவியத்யூனியன் — ரஷ்யா
  • பர்மா — மியான்மர்
  • கிழக்குபாகிஸ்தான் — பங்களாதேஷ்
  • சிலோன் — ஸ்ரீலங்கா
  • கம்பூச்சியா — கம்போடியா
  • பாரசீகம்,பெர்ஷியா — ஈரான்
  • மெஸமடோமியா — ஈராக்
  • சயாம் — தாய்லாந்து
  • பார்மோஸ — தைவான்
  • ஹாலந்து — நெதர்லாந்து
  • மலாவாய் — நியூசிலாந்து
  • மலகாஸி — மடகாஸ்கர்
  • டச் ஈஸ்ட் இண்டீஸ் — இந்தோனேசியா
  • சாண்ட்விச் தீவுகள் — ஹாவாய்
  • அப்பர்பெரு — பொலிவியா
  • பெக்குவானாலாந்து — போட்ஸ்வானா
அண்ணாமலை சுகுமாரன்

அண்ணாமலை சுகுமாரன்