• October 5, 2024

Tags :தன்னம்பிக்கை kavithai

சத்தமின்றி சாதனைகள் செய்வோம்!

வெடித்துச் சிதறிடும்வரை தான் எரிமலைவெடித்த பின்னே தரைமட்டமாகிதனிந்திடும் அதன் நிலை சீறிப் பாய்ந்திடும்வரை தான் கடலலைகரை தொட்ட பின்னே தன்னிலை மறந்தே பின்வாங்கிடும் அலை உயிர் கொண்டாடும்வரை தான் உடல் நிலைஉயிர் உதறிய பிறகுசொல்லவே தேவையில்லை மாற்றங்களை அப்படியேஏற்றுக் கொள்வோம்எங்கே தேவையோ அங்கே சாந்தமாய் செல்வோம் சத்தமின்றி சாதனைகள்செய்வோம்சாதனைகள் வழியேஉலகுள்ள வரை அழியாமல் வாழ்வோம்Read More

உன்னை நீ கேட்டுப்பார்!

மழையில்லாக் காட்டிடம் கேட்டுப்பார்வறட்சியின் வலி தெரியும்! பகையில்லா பிள்ளையிடம் கேட்டுப்பார்அன்பின் மொழிப் புரியும்! வீடில்லா விலங்கிடம் கேட்டுப்பார்வாழ்வின் வேதனை விளங்கும்! வாயில்லா பறவையிடம் கேட்டுப்பார்காற்றின் மொழி புரியும்! நீ உன்னையே கேட்டுப்பார் நீ யாரென்று உனக்கே தெரியும்உன் வலிமையும் புரியும்!Read More