அழியாத காதல்
மொழி பேசாத காலத்திலே
மொழி பேசிய காதலடி!
நிறம் அறிந்த காலத்திலே
இனம் அறியாத காதலடி!
போர் கொண்ட காலத்திலே
பகை நாட்டவர் போற்றிய காதலடி!
விழியற்று போனாலும்
மனம் பார்க்கும் காதலடி!
செவியற்ற நிலையிலும்
இசை கேட்கும் காதலடி!
நீ சொல்ல மறுத்தாலும்
உன் விழி சொல்லும் காதலடி!
Sarath Kumar
Writer