• December 4, 2024

முதுமையும் பிழைதானோ?

 முதுமையும் பிழைதானோ?

உன்னை மகன் என மகிழ்ந்த மனம்தான் இன்று..
எண்ணூறு திங்கள் ஆயுளுடன் மரணம் வேண்டி மனுவுடன் முதியோர் முகாமில்…

உன்னைப் பெற்ற கணம்
‘வெல்லம்’ எனத் திகட்டாத இன்பமும்!
நிகழ்கணம் ‘வெள்ளம்’ என விழிக்கெஞ்சலும்,
முதுமையும் பிழைதானோ?

சரி கடந்தது கரையட்டும்
விழி நீரோடு!

உன் உயிரணு உயிர் வளர்ப்பில்
வஞ்சம் ஒன்றும் வைத்துவிடாதே!
தவறினால்..
நீயும் முதியோர் இல்ல முகவரி தேடக்கூடும்!!

S. Parimaladevi

S. Parimaladevi

Othakkal Mandapam, Coimbatore


2 Comments

  • You deserve it… So proud of you… ???????…keep shining

Comments are closed.